Connect with us
Dhanush

Cinema News

இயக்குனரை பெருமைப்படுத்த தனுஷ் செய்த காரியம்!… ஆனா கடைசில வேற மாதிரி ஆகிடுச்சு… அடப்பாவமே!

சுந்தர் சியுடன் பல திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றி வந்தவர் சுராஜ். இவர் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் “மூவேந்தர்”. அதனை தொடர்ந்து சாய் சுரேஷ் என்ற பெயரில் “குங்கும பொட்டு கவுண்டர்”, “மிலிட்டரி” போன்ற திரைப்படங்களை இயக்கினார்.

அதன் பின் மீண்டும் சுராஜ் என்ற பெயரில் அவர் இயக்கிய திரைப்படம் “தலை நகரம்”. இத்திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்த நிலையில் அதனை தொடர்ந்து “படிக்காதவன்”, “மாப்பிள்ளை”, “அலெக்ஸ் பாண்டியன்” போன்ற பல திரைப்படங்களை இயக்கினார்.

Suraj

Suraj

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சுராஜ், தனுஷ் படத்தின் வெற்றிவிழாவின்போது நடந்த ஒரு சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் தனுஷ், தமன்னா, விவேக் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “படிக்காதவன்”. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற விவேக்கின் காமெடி காட்சிகள் இப்போதும் மிகப் பிரபலமானவை. மேலும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “என்னைய மாதிரி பசங்களை பார்த்தா பிடிக்காது. பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்” என்ற வசனம் மிகவும் புகழ் பெற்ற வசனமாகும் . அன்றைய இளைஞர்களை இந்த வசனம் மிகவும் கவர்ந்தது.

Padikkadavan

Padikkadavan

இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாக அமைந்த நிலையில் இத்திரைப்படத்தின் 100 ஆவது நாள் விழா கோவையில் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய தனுஷ், “என்னைய மாதிரி பசங்கள பார்த்தா பிடிக்காது, பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்” என்ற வசனத்தை கூறினாராம். அப்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய கைத்தட்டல் எழுந்ததாம்.

உடனே தனுஷ், சுராஜை அருகில் அழைத்து, “இந்த வசனத்தை எழுதியது இவர்தான்” என கூறினாராம். 10 பேர்தான் கைத்தட்டினார்களாம். அப்போது தனுஷ், “நீங்கள் இவருக்குத்தான் கைத்தட்ட வேண்டும். ஏன்னா இவர்தான் அந்த வசனத்தை எழுதியது” என்று சொன்னப்பிறகுதான் பலரும் கைத்தட்டினார்களாம்.

இதையும் படிங்க: அம்மா அப்பா எனக்கு பண்ணாததை கூட அவங்க செஞ்சிருக்காங்க… செண்டிமெண்டாக பேசிய தனுஷ் பட இயக்குனர்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top