More
Categories: Cinema News latest news

கேப்டனை மறக்காத கேப்டன் மில்லர்!.. ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!..

கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த செய்தி அறிந்த தனுஷ் அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவில்லை என்றும் தனுஷ் குடும்பத்துக்கே விஜயகாந்த் பல உதவிகளை செய்தும் அவரது சமாதியையோ அவரது குடும்பத்தினரையோ பார்க்காமல் கேப்டன் மில்லர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை நடத்துகிறார் நன்றி கெட்ட தனுஷ் என ப்ளூ சட்டை மாறன் கழுவி ஊற்றியிருந்தார்.

அவரது ட்ரோல்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற கேப்டன் மில்லர் ப்ரீ ரிலிஸ் நிகழ்ச்சியில் கேப்டன் விஜயகாந்துக்கு 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தியுள்ளார் தனுஷ்.

Advertising
Advertising

இதையும் படிங்க: அவ்வளவு வெறி மாப்பிள்ளைக்கு!.. 2ம் திருமணம் முடிந்த கையோடு அம்மாவான அமலா பால்!..

நடிகர் தனுஷ் சினிமாவில் பல நடிகர்களை வளர்த்து விட்டுள்ளார். கடந்த ஆண்டு வாத்தி படத்தைக் கொடுத்த தனுஷ் இந்த ஆண்டு பொங்கலுக்கு கேப்டன் மில்லர் படத்தை ரிலீஸ் செய்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பீரியட் படமாக இந்த படம் உருவாகி உள்ளது.

அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு தனது மகன்களுடன் வந்து செம கெத்தாக தனுஷ் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை எல்லாம் சன் டிவி வெளியிட்டு வருகிறது. சமீபத்தில், அயலான் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி தாஜ் ஹோட்டலில் சிறியளவில் நடைபெற்ற நிலையில், பெரியளவில் நேரு ஸ்டேடியத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் படிங்க: ஒரு படத்தை காலி பண்ணிட்டு!.. இப்படி ஜாலியா இருக்க உன்னால மட்டும் தான் முடியும்.. ரசிகர்கள் கலாய்!

தனுஷ் விஜயகாந்தை மறந்து விட்டு விழா நடத்துகிறார் என ஹேட்டர்கள் கதறிய நிலையில், அதெல்லாம் என்னோட கேப்டனை நான் எப்படி மறப்பேன் என தனுஷ் விஜயகாந்துக்கு ஒட்டுமொத்த படக்குழுவினர் மற்றும் தனது ரசிகர்களுடன் மெளன அஞ்சலி செலுத்தி உள்ளார்.

அதே போல இந்த படத்தில் சிவராஜ்குமார் நடித்துள்ள நிலையில், அவரது தம்பி புனித் ராஜ்குமார் மறைவுக்கும் மெளன அஞ்சலி செலுத்தினார் தனுஷ்.

Published by
Saranya M

Recent Posts