அட்வான்ஸ் எனக்கு!. ஆனா ஹீரோ நான் இல்ல!.. டெரர் தயாரிப்பாளரிடம் போங்காட்டம் ஆடும் தனுஷ்!..
துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நடிகர் தனுஷ். இவர் தமிழில் பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன். எனவே, ஒரு வாரிசு நடிகராகத்தான் தனுஷ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
அவரின் அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் தனுஷ் உருவாக்கினார். அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகராக மாறினார். ஒருபக்கம், நல்ல கதையம்சம் உள்ள, நடிப்பதற்கு வாய்ப்புள்ள கதைகளிலும், ஒருபக்கம் கமர்ஷியல் மசாலா படங்களிலும் நடித்து இரட்டை குதிரை சவாரி செய்து வருகிறார்.
இதையும் படிங்க: அஜித்தை நம்பி மோசம் போன சிரஞ்சீவி!. சைக்கிள் கேப்பில் எஸ்கேப் ஆன ஜெயிலர்….
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 2 முறை பெற்றவர் தனுஷ். தனுஷ் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டது எல்லோருக்கும் தெரியும். தனுஷுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஆனால், இதுவரை அவர்கள் எந்த சினிமாவிலும் நடிக்கவில்லை. ஆனால், விரைவில் தனுஷின் குடும்பத்திலிருந்து ஒரு புதிய நடிகர் வரவிருக்கிறார்.
தனுஷ் பிரபல சினிமா தயாரிப்பாளர் அன்பு செழியனிடம் சில வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தில் நடித்து கொடுப்பதாக சொல்லி அட்வான்ஸ் வாங்கினாரம். ஆனால், இப்போது வரை தனுஷ் அதை நிறைவேற்றவில்லை. சமீபத்தில் அன்பு அவரிடம் இதுபற்றி பேசியுள்ளார்.
இதையும் படிங்க: ஜெயிலர் படத்தின் 2 நாள் வசூல்!… விக்ரம் வசூலை தாண்டுமா?!. பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்!..
கேப்டன் மில்லர் படத்திற்கு பின் தனுஷ் இப்போது தனது 50வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த படத்தை அன்பு செழியனின் தயாரிப்பில் தனுஷே ஒரு படத்தை இயக்க முடிவெடுத்துள்ளாராம்.
ஆனால், தனுஷ் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க போவதில்லை. அவருக்கு பதில் அவரின் சகோதரி மகனை ஹீரோவாக நடிக்க வைக்கவுள்ளாராம். மேலும், ஒரு கேமியோ ரோலிலும் தனுஷ் வருகிறாராம். சினிமா உலகில் டெரர் தயாரிப்பாளராக பார்க்கப்படுபவர் அன்பு செழியன். அவரிடம் ஹீரோவாக நடிக்கிறேன் என சொல்லி அட்வான்ஸ் வாங்கிவிட்டு தனது அக்கா மகனை ஹீரோவாக நடிக்க வைக்க தனுஷ் முடிவெடுத்துள்ளது போங்காட்டமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 5 வயசு பாப்பா டிரெஸ்ல அலங்கோலமா காட்டும் லாஸ்லியா!.. இன்னைக்கு இது போதும்!…