நயன்தாராவுக்கு தொடர்ந்து கட்டய போடும் தனுஷ்!.. சுள்ளானுக்கு இன்னமும் கோபம் போகலயா?!...

by சிவா |   ( Updated:2024-08-27 14:10:00  )
dhanush
X

#image_title

Dhanush: சில வருடங்களுக்கு முன்பு தனுஷ், நயன்தாரா, விக்னேஷ் சிவன், அனிருத், சிவகார்த்திகேயன், திரிஷா என எல்லோரும் நெருங்கிய நண்பர்களாகவே இருந்தார்கள். சிவகார்த்திகேயனை தவிர மற்ற எல்லோரையும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இரவு நேர பார்ட்டிகளில் பார்க்க முடியும்.

இது தொடர்பான புகைப்படங்களும் பலமுறை இணையத்தில் வெளியாகியிருக்கிறது. தனுஷுடன் யாரடி நீ மோகினி படத்தில் நடித்தார். சிவகார்த்திகேயனை வைத்து தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் தனுஷ் கேட்டதால் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி கொடுத்தார் நயன்தாரா.

இதையும் படிங்க: விடாமுயற்சி டீமுக்கு அஜித் வாங்கி கொடுத்த சரக்கு பாட்டில்!.. ஆனா எல்லாமே வீணாப்போச்சே!…

வேலையில்லா பட்டதாரி படம் உருவானபோது அந்த படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்த விக்னேஷ் சிவன் இயக்குனராக மாற அவரை வைத்து நானும் ரவுடிதான் படத்தை தயாரித்தார் தனுஷ். ஆனால், படப்பிடிப்பு நடக்கும்போது நயனும், விக்கியும் காதலிக்க துவங்கிவிட்டனர்.

இதனால், படப்பிடிப்பு நாட்கள் அதிகரித்துக்கொண்டே போக பட்ஜெட்டும் அதிகரித்தது. இதனால் கடுப்பான தனுஷ் ‘நீ லவ் பண்றதுக்குலாம் நான் படமெடுக்க முடியாது. இதற்கு மேல் என்னால் பணம் கொடுக்க முடியாது’ என சொல்லிவிட்டார். காதலர்தான் இயக்குனர் என்பதால் நயன்தாரா மீது காசை கொடுக்க படத்தை முடித்தார் விக்னேஷ் சிவன்.

படம் ஹிட்டாகி நல்ல வசூலை பெற்றபின்னரும் விக்னேஷ் சிவனிடமோ, நயன்தாராவிடமோ தனுஷ் பேசவில்லை. இதை ஒரு விழா மேடையிலேயே சொன்னார் நயன்தாரா. அதன்பின் தனுஷின் எந்த படத்திலும் நயன்தாரா நடிக்கவில்லை. இந்நிலையில்தான், விஜய் சேதுபதியை வைத்து மகாராஜா படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் அடுத்து நயன்தாராவை வைத்து மகாராணி என்கிற படத்தை இயக்கவிருந்தார்.

ஆனால், அந்த படத்தின் அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இப்போதுதான் அதற்கான காரணம் வெளியே கசிந்திருக்கிறது. நித்திலனை அழைத்து ஒரு கதை கேட்டிருக்கிறார் தனுஷ். நித்திலன் சொன்ன கதை பிடித்துப்போக நடிக்க சம்மதித்துவிட்டார் தனுஷ். ஆனால், எப்போது அவர் நடிக்க வருவார் என்பது தெரியவில்லை. எனவேதான், மகாராணி படம் தொடர்பான அறிவிப்பை வெளியிடாமல் இருக்கிறார்களாம்.

இதையும் படிங்க: எல்லா கோட்டையும் அழிங்க… லால் சலாம் படத்துக்கு நல்ல காலம் பொறக்கலையப்பா!…

Next Story