தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தை மித்ரன் இயக்கியிருந்தார். ஏற்கெனவே இவர் தனுஷை வைத்து உத்தம புத்திரன் என்ற படத்தை எடுத்து அதில் வெற்றியும் பெற்றார். இந்த படமும் எதிர்பார்த்த அளவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷிகண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யாமேனன் போன்றோர் நடித்திருந்தனர். படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்கள் : முதலில் அஞ்சலி.. இப்போ குட்டி நயன்தாரா.! குறி வைத்து காத்திருக்கும் ‘அந்த’ இளம் நடிகர்.!

படத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், விஜய்டிவி புகழ் அறந்தாங்கி நிஷா, முனிஷ்காந்த் போன்றோரும் நடித்திருக்கின்றனர். அறந்தாங்கி நிஷா மற்றும் முனிஷ்காந்த் இணைந்து நகைச்சுவையில் கலக்கியிருக்கின்றனர். ஏற்கெனவே விஜய்டிவியில் நல்ல ஜோடி என்றால் அது அறந்தாங்கி நிஷா மற்றும் ராமர் தான்.இவர்கள் இருவருக்குள்ளும் வரும் சண்டையினாலயே மிகவும் பிரபலமானார்கள்.

இதையும் படிங்கள் : மீண்டும் விஜய் ரூட்டுக்கு தாவிய விஷால்.! வெளியான புது போஸ்டரால் குழப்பத்தில் ரசிகர்கள்.!
அப்படி பட்ட ஜோடியை பிடித்துப் போயிதான் தனுஷ் ராமரையும் அறந்தாங்கி நிஷாவையும் முதலில் கமிட் செய்துள்ளார். ஆனால் ராமர் அந்த சமயம் ராமர் எதற்கும் துணிந்தவன் படத்தில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாராம். அதன் பிறகு தான் முனிஷ் காந்த் கமிட் ஆகியுள்ளார். ஆனால் எங்களை தனுஷ் சாருக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்ப கூட ராமர் அண்ணாகிட்ட சொல்வேன். நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டனு என்று அறந்தாங்கி நிஷா கூறினார்.





