தனுஷை கண்டு தெறித்து ஓடும் நடிகைகள்.! இந்த லிஸ்டில் புதியதாக 'அந்த' சென்சேஷனல் நடிகை.!?

by Manikandan |
தனுஷை கண்டு தெறித்து ஓடும் நடிகைகள்.! இந்த லிஸ்டில் புதியதாக அந்த சென்சேஷனல் நடிகை.!?
X

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான மூன்று திரைப்படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அந்த மூன்று திரைப்படங்களும் OTT தளங்களில் வெளியானது. இதனால் அடுத்த படத்தை வெற்றி படமாக்கவேண்டும் என்று தனுஷ் முயற்சித்து வருகிறார்.

அதன்படி அடுத்ததாக தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் எனும் திரைப்படம் தியேட்டரில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க, சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவரும் சம்மதிப்பதாக இருந்ததாம்.

ஆனால், ஏனோ சில காரணங்களால் தற்போது அவர் அந்த படத்திலிருந்து விலகி விட்டாராம். இதன் காரணமாக வேறு ஒரு ஹீரோயினை படக்குழு தேடி வருகிறதாம்.

இதே போல, தனுஷ் தயாரித்து அவரே இயக்க இருந்த ஒரு திரைப்படத்தில் போனி கபூர் மகள் ஜான்வி கபூரை நாயகியாக களமிறக்க தனுஷ் முயற்சித்து, பிறகு ஜான்வி கபூர் தனுஷ் திரைப்படத்தில் நடிக்க மறுத்து விட்ட செய்தியை நாம் முன்னர் அறிந்திருப்போம்.

இதையும் படியுங்களேன் - விக்ரம் 3 படத்தில் அந்த மூன்று நடிகர்கள் வேண்டும்!...இந்த ரசிகை சொல்றத கேளுங்க..(வீடியோ).....

தற்போது ஏனோ தெரியவில்லை தொடர்ந்து இரண்டு இளம் நடிகைகளும் தனுஷ் படத்தில் நடிப்பதை தவிர்த்து வருகின்றனர். இது குறித்து நெட்டிசன்கள் பலவாறு கிசுகிசுத்து வருகின்றனர்.

மேலும், இதற்கு இடையில் தெலுங்கு சென்சேஷனல் நாயகி கீர்ட்டி ஷெட்டியை தனுஷ் படக்குழு ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க முயற்சித்ததாம் . ஆனால் அந்த படமே டிராப் ஆகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story