Categories: Cinema News latest news tamil cinema gossips

அந்த ஒரு பெண்ணை கட்டம் கட்டும் தனுஷ்.! இவர் இன்னும் திருந்தவே இல்லையா.?

தற்போதைய சினிமா காலகட்டத்தில் பெரும்பாலான இளம் முன்னணி நடிகர்கள் தங்கள் இருப்பிடத்தை காட்ட ஏதேனும் ஹிட் கொடுத்து நிரூபித்து விட்டனர். ஆனால் ரசிகர்கள் கொஞ்சம் மறந்து போன நபர் என்றால் அது தனுஷ் தான்.

அவர் நடிப்பில் அடுத்து பல்வேறு திரைப்படங்கள் தயாராகி வருகிறது. அதில் எத்தனை படம் வந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் முக்கியமான திரைப்படம் என்றால் அது நானே வருவேன் தான்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் நடித்த சாணிக் காயிதம் படத்தின் ஒளிப்பதிவாளர் யாமினி என்கிற பெண் ஒளிப்பதிவாளர். அப்படத்தின் ஒளிப்பதிவு வேலைகள் பிடித்து பொய் தனுஷ் நடிக்க தான் இயக்கும் நானே வருவேன் படத்தில் முதலில் யாமினியை கமிட் செய்தார் செல்வராகவன்.

இதையும் படியுங்களேன் – 40 வயசுல குழந்தை பெத்துக்க போறீங்களா.?! நயன்தாரா பற்றிய டாக்டரின் ‘ச்சீ’ கமெண்ட்.. ஆதாரத்தை காட்டிய சின்மயி.!

ஆனால், ஏனோ காரணத்தால், தனுஷ் மற்றும் யாமினி இடையே கருத்து வேறுபாடு வரவே, தம்பி தனுஷுக்காக யாமினியை படத்தில் இருந்து தூக்கினார் செல்வராகவன். இந்த விஷயம் தெரியாமல், அருண் மாதேஸ்வரன் அடுத்து இயக்க போகும் தனுஷ் படத்திற்கு ஒளிப்பதிவாளராக யாமினியை புக் செய்திருந்தாராம்.

இது எப்படியோ தனுஷுக்கு தெரியவரவே யாமினியை முதலில் மாற்றுங்கள் என கூறிவிட்டாராம். பிறகு யாமினியை மாற்றி வேறு ஒரு ஒளிப்பதிவாளரை வைத்து படத்தை ஆரம்பிக்க உள்ளனராம் தனுஷ் – அருண் மாதேஸ்வரன் டீம். யாமினிக்கும் , தனுஷுக்கும் அப்படி என்னதான் ஆயிற்று எதனால், அந்த பெண் ஒளிப்பதிவாளரை தனுஷ் கட்டம் கட்டுகிறார் என தெரியாமல் சினிமா வட்டாரம் குழம்பி போய்யுள்ளதாம்.

Published by
Manikandan