Categories: Cinema News latest news

தனுஷுக்காக காத்திருக்கும் 50 கோடி… தீவிரமான கதை விவாதத்தில் பழம்பெரும் இயக்குனர்.!

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நாயகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். தனது நடிப்பு திறமையால் தமிழை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் என தடம் பதித்து வருகிறார்.

இவர் இயக்கத்தில் அடுத்ததாக திருச்சிற்றம்பலம் திரைக்கு வரவுள்ளது. அதனை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் வாத்தி என தயாராகிறது.

இதற்கிடையில், பழம்பெரும் இயக்குனர் வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, ராஜாதி ராஜா, மெல்ல திறந்தது கதவு  என சில்வர் ஜூப்லி படங்களை இயக்கிய ஆர்.சுந்தர்ராஜன் தற்போது ஒரு பிரமாண்ட பட்ஜெட்டில் கதை எழுதி வருகிறாராம்.

இதையும் படியுங்களேன் – மீண்டும் துளிர்விடுமா காதல்.? ஒரே வீட்டில் தனுஷ் – ஐஸ்வர்யா.! வெளியான ரகசிய தகவல்…

அதாவது இந்த கதைக்கான பட்ஜெட் 50 கோடி, இதில் நடிக்க சரியான ஆள் தனுஷ் தான் என தீர்மானம் செய்து கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறாராம். அதன் படி, கதை தயார் செய்து விட்டு தான் அவரிடம் சென்று கூறுவாராம். இதனை தனது நெருங்கிய வட்டாரத்தில் கூறியுள்ளார்.

ஆர்.சுந்தர்ராஜன் பழம்பெரும் இயக்குனர் அவர் இயக்கத்தில் எப்படி தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் தனுஷ் நடிப்பார். ஒருவேளை தற்போதைய ட்ரெண்டிற்கு அவர் மாறிவிட்டாரா என போக போகத்தான் தெரியும்.

Published by
Manikandan