Rayan Movie: தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தன் பெஸ்ட்டை கொடுப்பார் போல தனுஷ். அந்தளவுக்கு இவர் இப்போது இயக்கி நடித்து வரும் ராயன் திரைப்படத்தில் தனுஷின் பெர்ஃபாமன்ஸை பார்த்து செல்வராகவனும் எஸ்.ஜே. சூர்யாவும் தனுஷை மாறி மாறி புகழ்ந்து வருவதை நம்மால் பார்க்க முடிந்தது.
தனுஷின் 50வது படம்தான் ராயன். இந்தப் படத்தை தனுஷே இயக்கி வருகிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் ராயன் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், செல்வராகவன், எஸ்.ஜே. சூர்யா போன்ற முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அப்டேட்டா கேட்கிறீங்க.. இந்தா வாங்கிக்கோங்க!.. விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் லீக் ஆகிடுச்சு!..
இவர்கள் ஒவ்வொருவருக்கும் நடிப்பு என்றால் என்ன என்பதை சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை. அனைவருமே ஒருவருக்கொருவர் இளைச்சவர்கள் இல்லை என்பதை போலத்தான் படத்திலும் இருப்பார்கள். சமீபகாலமாக ஒவ்வொருவரின் போஸ்டர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
படத்தின் படப்பிடிப்பு ஈவிபியில்தான் நடக்கிறதாம். அங்கே ஒரு கிராமம் போல் செட் போட்டுத்தான் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். போஸ்டரை பார்த்த பலரும் வடசென்னை படத்தை நியாபகப்படுத்துவதாக தெரிகிறதே என்று கமெண்ட் அடித்து வந்தார்கள்.
இதையும் படிங்க: ஆஹா என் ஆண்டவரை பார்த்துட்டேன்!.. மஞ்சுமெல் பாய்ஸ் ஃபைனல் கிளைமேக்ஸ் இதுதான்.. இயக்குநர் செம போஸ்ட்!
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பிரபல பத்திரிக்கையாளர் சுந்தர் ‘வடசென்னை 2 படமாக இருக்காது. ஏனெனில் அது வெற்றிமாறன் தனுஷ் இணைந்து செயல்பட்டால்தான் நடக்கும். ஒருவேளை புதுப்பேட்டை படத்தின் கதையை தழுவி கூட இருக்கலாம்.
ஏனெனில் ரசிகர்கள் நெடுங்காலமாக புதுப்பேட்டை 2 படம் எப்போ வரும் என்றுதான் கேட்டு வந்தார்கள். அதனால் அதை அடிப்படையாக கொண்டு கூட ராயன் திரைப்படம் அமையலாம்’ என பத்திரிக்கையாளர் சுந்தர் கூறினார்.
இதையும் படிங்க: ஜெயிலர் 2வா?.. அடபோங்கயா!.. தீவில் ஜாலி பண்ணும் நெல்சன்.. கூட யாரெல்லாம் போயிருக்காங்க தெரியுமா?
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…