கே.ஜி.எஃப் எனும் பிரமாண்ட ஆக்சன் படங்களை கொடுத்து உலக சினிமாவையே தன பக்கம் பார்க்க வைத்து விட்டனர் கன்னட சினிமாகாரர்கள். அந்த படங்களின் தாக்கம் அடங்குவதற்குள் விக்ராந்த் ரோனா எனும் பிரமாண்ட படத்தை அறிவித்தது கன்னட சினிமா.
நான் ஈ புகழ் கிச்சா சுதீப் ஹீரோவாக நடிக்க திகில் கலந்த திரைப்படமாக உருவானது. இந்த திரைப்படம் கே.ஜி.எப்க்கு ஒரு படி மேலே, தமிழ், தெலுங்கு, ஹிந்தி தாண்டி, ஆங்கிலத்திலும் டப்பிங் செய்யப்பட்டது. அந்த விடியோவும் வெளியிட்டு படக்குழு ஆச்சரியப்படுத்தியது.
இப்படத்தை அனுப் பந்தாரி என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் ஜூலை 28ஆம் தேதி இப்படம் உலகம் முழுக்க வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
அதில், ஒரு வினோதமான பேய்யால் பயந்து கிடக்கும் ஊரில் புதியதாக ஒரு இன்ஸ்பெக்ட்டர் வருகிறார். அவர் தான் ஹீரோ சுதீப். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே படத்தை கதைக்களமாக இருக்கிறது. மாயாஜால காட்சிகளாக ட்ரைலர் இருக்கிறது.
இதையும் படியுங்களேன் – காதல் சின்னத்தை அந்த நபருடன் கைகோர்த்து காண்பித்த லாஸ்லியா.! நொறுங்கி போன ரசிகர்கள்…
கன்னடத்தின் அடுத்த கே.ஜி.எப் பிரமாண்டம் போல தயாராகியுள்ள விக்ராந்த் ரோணா படத்தின் தமிழ் ட்ரைலரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். அந்த ட்ரைலர் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விக்ராந்த் ரோணா ரிலீஸ் ஆகும் ஜூலை 28 ஆம் தேதி தான் தனுஷ் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…