ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் 100வது படம்... முன்னணி நடிகரின் வாய்ப்பை தட்டி பறித்த தனுஷ்
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி உடைய நிறுவனமான சூப்பர்குட் பிலிம்ஸின் 100வது படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
கோலிவுட் குறித்த தெரிந்த எல்லாருக்குமே சூப்பர் குட் பிலிம்ஸ் என்றால் தெரியாமல் இருக்காது. இதன் நிர்வாக இயக்குனர் தான் ஆர். பி. சௌத்ரி. சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் ஏற்றுமதி மற்றும் நகை வியாபாரம் செய்து வந்தார்.
பின்னர், மலையாள சினிமாவை தயாரிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. முதலில் தனது நிறுவனத்துக்கு "சூப்பர்" எனப் பெயரிட்டு அதில் படங்களை தயாரித்து வந்தார். 1989ஆம் ஆண்டில், தமிழ் சினிமாக்களை தயாரிக்க தொடங்கினார். அப்போது குட் நைட் நிறுவனத்தின் ஆர். மோகனுடன் இணைந்து 'சூப்பர்' பேனரில் திரைப்படங்களைத் தயாரித்தார்.
இதையும் படிங்க: தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் வித்தியாச நடைமுறை… இதை செய்தபிறகு தான் ஹீரோவை செலக்ட் செய்வாராம்…
ஒரு கட்டத்தில் இந்த கூட்டணி உடைந்தது, இருந்தும் அவர் மீது இருந்த மரியாதையில் குட் நைட்டில் இருந்த ’குட்’-ஐ எடுத்து சூப்பருடன் இணைத்து சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தினை உருவாக்கி நடத்தி வருகிறார்.
ஆர்.பி.சௌத்ரி தனது நிறுவனத்தில் தயாரிக்க இருக்கும் படங்களின் கதையை முதலில் அவர் முழுதாக கேட்டு விடுவாராம். அது அவருக்கு பிடித்திருந்தால் மட்டுமே கதையை நாயகனிடம் சொல்லக் கூறி இயக்குனரை அனுப்புவார். இதனால் தான் சூப்பர் குட் நிறுவனத்தில் தயாரித்த பெருவாரியான படங்கள் ஹிட்டானது.
தொடர்ந்து பல வருடமாக தயாரிப்பில் இருக்கும் ஆர்.பி.சௌத்ரி விரைவில் தனது 100வது படத்தினை தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் முதலில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. விஜயின் நெருங்கிய நண்பராக இருக்கும் ஜீவாவின் ஆசைக்கூட தங்கள் நிறுவன 100வது படத்தில் விஜய் இருக்க வேண்டும் என்பது தானாம்.
ஆனால் தொடர்ச்சியாக படங்களில் கமிட்டாகி இருக்கும் விஜயால் சூப்பர் குட் நிறுவனத்தின் படத்தில் நடிக்க முடியாது எனக் கூறிவிட்டாராம். இது ஆர்.பி.சௌத்ரிக்கு மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்ததாம். இதை தொடர்ந்து அந்த 100வது படத்தில் விஜயிற்கு பதில் தனுஷ் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. கேப்டன் மில்லர் படத்தினை முடித்துக்கொண்டு தனுஷ் இணைய இருக்கும் படம் இதுவாக தான் இருக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.