உச்சத்தில் இருக்கும் தனுஷ் இதை செய்வாரா? அவங்க கூட நெருங்க கூடாது.. விளாசும் பிரபலம்..
Dhanush: பாடகி சுசித்ரா தன்னுடைய பேட்டிகளில் தொடர்ச்சியாக கோலிவுட் முன்னணி பிரபலங்களை சாடி வருகிறார். இதில் சுசித்ராவுக்கு சப்போர்ட் இருந்தாலும் சிலர் தனுஷ் தரப்புக்கு ஆதரவாக பேசி வரும் நிலையில் பிரபல திரை விமர்சகர் செய்யாறு பாலு சில ஷாக் விஷயங்களை தெரிவித்து இருக்கிறார்.
கோலிவுட்டில் ஒவ்வொரு நேரத்திலும் சில பிரச்சினைகள் பெரிய அளவில் வெடிக்கும். அப்படித்தான் பாடகி சுசித்ரா கடைசியாக கொடுத்த பேட்டி பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்தி தொடங்கி கோலிவுட்டின் பல முன்னணி பிரபலங்கள் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: அந்த விஷயத்துல எம்.ஜி.ஆரும் சிவாஜியும் வேற வேற!.. சீக்ரெட் சொல்லும் நாகேஷ்…
இதனால் ரசிகர்கள் பலர் ஷாக்கில் இருக்கும் நிலையில், சுசித்ராவுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சுசி லீக்ஸ் குறித்து பேசும்போது ட்விட்டர் கணக்கில் அந்த வீடியோக்கள் மட்டும் போட்டோக்களை தனுஷ் மற்றும் அவரது நண்பர்கள் தான் வெளியிட்டனர். அதற்கு என்னுடைய பாஸ்வேர்டு கொடுத்தது முன்னாள் கணவர் கார்த்திக். இடையிடையில் நான் அழுவது போலவும் என்னுடைய கருத்தையும் போட்டு சமாளித்துக் கொண்டனர்.
அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என சுசித்ரா வரிசையாக தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். இதைக் குறித்து பலரும் கேட்கும்போது தனுஷை எப்படி அவரை அசிங்கப்படுத்திக் கொண்டிருப்பார் என்கின்றனர். உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் வானவில் போல. அவர்களை தூரத்தில் இருந்தே பார்த்து ரசித்து கொள்ளுவது தான் ரசிகர்களுக்கு நல்லது.
இதையும் படிங்க: ஜிவி பிரகாஷ்-சைந்தவி விவாகரத்தில் விஜய், ரஹ்மான் தலையிட்டது உண்மையா? உண்மையை உடைக்கும் பிரபலம்!