Nayanthara: 'சின்னவரிடம்' சென்ற நயன் பஞ்சாயத்து?... தனுஷின் பதில் என்ன? ,,

danush and nayanthara
நானும் ரவுடி தான் படத்தில் இருந்து 3 நொடிகள் வீடியோவை தன்னுடைய திருமண ஆல்பத்திற்கு நயன்தாரா கேட்டுள்ளார். கடந்த 2 வருடங்களாக கேட்டும் கூட தனுஷ் அதற்கு பதில் அளிக்கவில்லை. மேலும் முடியாது என்றும் தெரிவித்து இருக்கிறார்.
தனுஷின் அனுமதில் இன்றி முறையான காப்பிரைட் இல்லாமல் நயன்தாரா தன்னுடைய திருமண வீடியோவில் அந்த கிளிப்பினை பயன்படுத்தி விட்டார். இதனால் காண்டான தனுஷ் வழக்கறிஞர் மூலம் லீகல் நோட்டிஸ் அனுப்ப, பதிலுக்கு நயன்தாரா சட்டப்படி இதனை எதிர்கொள்ளாமல் சமூக வலைதளத்தின் மூலம் எதிர்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: தனுஷ் மட்டுமில்ல!. அல்லு அர்ஜூனையும் அசிங்கப்படுத்தும் நயன்!. வைரலாகும் வீடியோ!..
அவருக்கு சக நடிகைகளும் இந்த விஷயத்தில் ஆதரவு தெரிவிக்க, தான் ஏதோ பெரிய சமூக சேவை செய்தது போல நயன்தாராவும் அவரின் கணவர் விக்னேஷ் சிவனும் மாற்றி மாற்றி சமூங்க வலைதளங்களில் தனுஷ் குறித்து பதிவிட்டு வருகின்றனர். இந்தநிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
உதயநிதி
தற்போதைய விளையாட்டு துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் மூலம் நயன்தாரா தனுஷுக்கு தூது விட்டதாக் சொல்லப்படுகிறது.. ஆனால் உதயநிதி தலையிட்டும் கூட தனுஷ் வீடியோவிற்கு அனுமதி அளிக்கவில்லையாம். இந்த கடுப்பில்தான் அடுத்ததாக சமூக வலைதளத்தை நயன்தாரா தேர்வு செய்திருக்கிறார்.

#image_title
என்ன பிரச்சினை
இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் வீடியோ கிளிப் இருவருக்கும் பிரச்சினை இல்லை. வேறு ஏதோ இலைமறை காய்மறையாக திரை மறைவில் ஓடிக்கொண்டு இருக்கிறது. விரைவில் அது தெரியவரும். அதுவரை நாம் இதை கடந்து போவோம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மன தைரியம்
மற்றொரு தரப்பினர் அரசியல் தலையீடு இருந்தும் வீடியோவிற்கு தனுஷ் அனுமதி மறுத்து இருக்கிறார். அவரின் இந்த மன தைரியத்தினை பாராட்ட வேண்டும் என அவருக்கு ஆதரவாக ட்விட்டரில் கம்பு சுத்தி வருகின்றனர். எது எப்படியோ எல்லாருக்கும் வீக்கெண்டில் ஒரு நல்ல எண்டர்டெயின்மெண்ட் கிடைத்திருக்கிறது.