Categories: Cinema News latest news

போயஸில் மாளிகை கட்டினால் கூட நிம்மதி இல்லாமல் தவிக்கும் தனுஷ்… ஐஸுக்காக உருகுகிறாரா?

Actor Dhanush: நடிகர் தனுஷ் தற்போது நடிப்பில் கவனம் அதிகமாக சிதறுவதாகவும், அடிக்கடி ஷூட்டிங்கை கேன்சல் செய்வதெல்லாம் நடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதுகுறித்து தற்போது அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் சில வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் தற்போது டி50, கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஆனால் அவர் நடிப்பில் தற்போது அதிக கவன சிதறலுடன் இருப்பதாகவும், அடிக்கடி ஷூட்டிங்கிற்கு மட்டம் போடுவதாகவும் திரை விமர்சகர்கள் அதிருப்தி தெரிவித்து இருக்கின்றனர்.

Also Read

இதையும் படிங்க: பாரதிராஜா மனதில் நினைத்ததை பாட்டில் சொன்ன கண்ணதாசன்!. இப்படி ஒரு தீர்க்கதரி்சியா?!..

இதற்கிடையில் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றனர். யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக திடீரென விவாகரத்தினை அறிவித்தனர். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முதலில் தைரியமாக இருந்த தனுஷ் தற்போது மனைவி ஐஸ்வர்யா பிரிவில் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. கோடி கோடியாக கொட்டி போயஸ் தோட்டத்தில் வீட்டினை கட்டி இருக்கிறார். அந்த வீட்டினை அலங்கரிக்க எல்லா ஐடியாவையும் கொடுத்தது மனைவி ஐஸ் தானாம்.

இதையும் படிங்க: பாரதிராஜாவுக்கே ஐடியா கொடுத்த நடிகர்… முதல் படமே தோல்வி… இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

தற்போது தான் தனுஷ் குடும்பத்தினை பிரிந்து ரொம்பவே வாடுவதாகவும் இது அவரின் நடிப்பு வாழ்க்கையை பாதிப்பதாகவும் கூறப்படுகிறது. அவரின் போட்டி எனச் சொல்லப்பட்ட சிம்பு ஒரு கட்டத்தில் செய்த அனைத்தையும் தற்போது தனுஷும் செய்து வருகிறார்.

ஆனால் ஷூட்டிங்கை கட் செய்ய என்னனவோ செய்த சிம்பு சரியாக படப்பிடிப்புகளில் கலந்து வருகிறார். என்ன மாயமோ எல்லாம் அப்படியே இருக்கது இல்ல போல என திரை விமர்சகர்கள் கிசுகிசுக்கின்றனர்.

Published by
Akhilan