Connect with us
dhanush

Cinema News

ஒரு ஈ காக்கா கூட இல்ல! வெட்டிப்பந்தாவுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. ரஜினி விஜயை மிஞ்சிய தனுஷ்

Actor Dhanush: கோலிவுட்டில் இன்று ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். அவர் நடித்த பெரும்பாலான படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் வெற்றிமாறனின் பொல்லாதவன் படம்தான் தனுஷுக்கு ஒரு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.

பொல்லாதவன் படத்தில் தனுஷுன் ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்தப் படத்தில் சிக்ஸ் பேக்ஸை காட்டி ஆரம்பத்தில் சிரிப்பை வரவழைத்தாலும் தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களில் நடித்து தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்க வைத்துக் கொண்டார் தனுஷ். இதில் சூப்பர்ஸ்டார் மருமகன் என்ற அந்தஸ்தும் தனுஷிடம் சேர்ந்து கொண்டது.

இதையும் படிங்க: நோ சொன்ன அஜித்… விஜய்க்காக எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்… அப்போவே அப்படியா?

ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்த தனுஷ் அவருடன் 18 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து இப்போது விவாகரத்துக்கு நீதிமன்றத்தை நாடியுள்ளனர். சமீபகாலமாக தனுஷின் படங்கள் மக்கள் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளன. அந்தளவுக்கு சமூகத்திற்கு ஏதாவது ஒரு வகையில் நல்ல கருத்தை சேர்க்கும் விதமாக கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அதனால் தனுஷின் படம் என்றாலே ரசிகர்கள் ஆர்ப்பரித்து திரையரங்கிற்கு வருவதை பார்க்க முடிகின்றது. விஜய், அஜித் இவர்களுக்கு அடுத்த இடத்தில் தனுஷும் இருக்கிறார் என்றால் அதற்கு தகுதியான நபராகவே பார்க்கப்படுகிறார். இந்த நிலையில் நேற்று ஓட்டுப் போட திரையுலகை சேர்ந்த பலரும் அவரவர் தொகுதிக்கு சென்று ஓட்டை பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: பவர் ஸ்டார் சொன்னதை உண்மையாக்கிய சூப்பர் ஸ்டார்.. இனிமே சிங்கம் மிங்கிள்தான்! களைகட்டும் ‘ரஜினி171’

இதில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என பல முன்னனி நடிகர்கள் மிகவும் சாதாரணமாக வந்து தங்கள் ஓட்டை பதிவு செய்தார்கள். எப்பேற்பட்ட நடிகர் ரஜினி? அவரே மிகவும் எளிமையாக வந்து அவருடைய கடமையை ஆற்றினார். அஜித் வந்ததே தெரியாத அளவுக்கு வந்து ஓட்டை பதிவு செய்தார். இதில் விஜய்க்கு மட்டுமே எங்கும் இல்லாத கூட்டம் கூடி விஜயை ஒரு வழி பண்ணிவிட்டார்கள்.

ஆனால் தனுஷ் ஒரு பெரிய கருப்பு நிற காரில் பாடி பில்டர்ஸ் படை சூழ கெத்தாக வந்து இறங்கி தனது வாக்கை பதிவு செய்ததுதான் இப்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
எதுக்கு இந்த வெட்டி பந்தா? டாட்டா பிர்லா ரேஞ்சுக்கு வந்து இறங்கி ஓட்டுப் போட்ட தனுஷை நெட்டிசன்கள் போட்டு பாடாய் படுத்தி வருகின்றனர்.தனது ஜனநாயக கடமையை ஆற்றிய கையோடு அடுத்ததாக சேகர் கமுலா படத்திற்காக சென்று விட்டாராம் தனுஷ்.

இதையும் படிங்க : ஆதாயம் இல்லாம செய்யமாட்டார் ஆண்டவர்! கமல் செஞ்ச வேலையால் பணம் கொட்டுச்சு.. மிதப்பில் தயாரிப்பாளர்

google news
Continue Reading

More in Cinema News

To Top