எங்க போனாலும் விரட்டுராங்க! ஒரேடியா துண்ட போட்டு உட்கார்ந்த தனுஷ்! டி50 படத்திற்காக இப்படி ஒரு முடிவா?

Published on: July 4, 2023
dhanush
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் தனுஷ். இந்த சின்ன வயதிலும் மெச்சூரிட்டியான அனுபவத்தையும் சிந்தனையையும் கொண்டு திகழ்ந்து வருகிறார். தனுஷை சிறுவயதில் இருந்து பார்த்தவர்கள் அவரின் அபார வளர்ச்சியை கண்டு பூரிப்படையாதவர்களே இல்லை. அதற்கு ஏற்றார் போல சமீப காலமாக அவர் தேர்ந்தெடுக்கும் கதையும் மக்களை வெகுவாக எடுத்து வருகிறது.

தனுஷ் நடித்து வெளியான கடைசி ஐந்து ஆறு படங்களை எடுத்துக் கொண்டால் குறிப்பாக அசுரன், கர்ணன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை பார்த்தோமேயானால் எந்த மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் என்பதை அவர் படத்தின் மூலமாகவே நாம் அறிந்து கொள்ள முடியும்.

dhanush1
dhanush1

இதையும் படிங்க : ‘லியோ’ படத்தில் இவருக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா? அப்போ த்ரிஷாவோட நிலைமை?

சமீபத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் தனுஷ் அடுத்ததாக தன்னுடைய ஐம்பதாவது படத்தில் நடிக்க இருக்கிறார். கேப்டன் மில்லர் படத்திற்காக நீண்ட தாடி முடியுடன் இருந்த தனுஷ் நேற்றுதான் தன் குடும்பத்துடன் திருப்பதியில் மொட்டை போட்டு தன்னுடைய நேர்த்திக் கடனை முடித்துக் கொண்டாராம்.

தன்னுடைய ஐம்பதாவது படத்தை அவரை இயக்கி நடிப்பதாகவும் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் இந்த தனுஷின் ஐம்பதாவது படத்தில் எஸ் ஜே சூர்யா, விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

இதையும் படிங்க :தமிழில் டொக்கு மூஞ்சு என கலாய் வாங்கி ஹிட்டு கொடுத்த 5 நடிகர்கள்!.. இதோ லிஸ்ட்…

இந்த நிலையில் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பை சென்னையில் உள்ள பின்னி மில் மைதானத்தில் நடத்த இருப்பதாக திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் அங்கு அனுமதி கொடுக்கப்படவில்லையாம். அதனால் சோழிங்கநல்லூரில் ஒரு ஆளுங்கட்சி எம்எல்ஏவின் இடத்தை படப்பிடிப்பிற்காக எடுத்திருப்பதாக கூறுகிறார்கள் .அது ஒரு பெரிய பொட்டல் காடு போல இருக்கிறதாம்.

dhanush2
dhanush2

அதாவது தனுஷ் இந்த படம் முழுவதையும் ஒரே ஒரு லொகேஷனில் வைத்து மட்டுமே எடுக்கப் போகிறாராம். அதனால் அது ஒரு பெரிய இடமாக இருக்க வேண்டும் என கருதுகிறாராம். அதனால் இந்த சோழிங்கநல்லூர் இடம் சரியாக வரும் என நினைத்து அதில் 100 வீடுகள் கொண்ட செட்டையும் போட இருக்கிறார்களாம். அதற்காகவே இந்த இடத்தை தேர்ந்தெடுப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது.

இதையும் படிங்க :ஜனகராஜ் வாழ்க்கையில் ஒளியேற்றிய இயக்குனர் யார் தெரியுமா..! – பார்க்கலாமா?..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.