More
Categories: Cinema News latest news

தனுஷை விட இவரு கொல மாஸா இருக்காரே!.. கேப்டன் மில்லர் மிஸ் ஆனது போல ராயன் மிஸ்ஸே ஆகாது!..

தனுஷின் ராயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போது கூட ரசிகர்கள் இவ்வளவு ஹேப்பியாகி இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு தற்போது தனுஷ் ரசிகர்களே ராயன் படம் தப்பித்து விடும் என நினைக்கும் அளவுக்கு ஒரு அட்டகாசமான போஸ்டரை தனுஷ் வெளியிட்டு இருக்கிறார்.

ராயன் படம் தனுஷ் இயக்கி நடித்துக் கொண்டிருக்கும் அவர் நடிப்பில் உருவாகி வரும் 50வது படம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: இளையராஜா கொடுத்த வாய்ப்பு.. சிவாஜி போட்ட கண்டிஷன்!.. மலேசியா வாசுதேவன் நடிக்க வந்தது ஏன்?

இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் வசூலில் பெரிய அடி வாங்கி ஃபிளாப் ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து வரும் ராயன் படம் அப்படி ஃபிளாப் ஆகாது என ரசிகர்கள் உறுதியாக நம்பத் தொடங்கி விட்டனர்.

ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் 100 கோடி வசூல் ஈட்டி ஹிட் அடித்தது. அதன் பின்னர் வெற்றி கொடுக்க முடியாமல் தனுஷ் தவித்து வருகிறார். இந்நிலையில், ராயன் படத்தில் எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளார். அவரது அட்டகாசமான கேரக்டர் லுக் போஸ்டரை தான் தற்போது தனுஷ் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன், தனுஷ் பின்னாடி ஓடாத நாளே இல்ல! இப்படி பண்ணுவாங்கனு நினைக்கல.. வருத்தத்தில் சேரன்

மிடாஸ் டச் போல மாறியுள்ள எஸ்.ஜே. சூர்யா தான் ஹீரோவாக நடிக்கும் படங்கள் ஓடவில்லை என்றாலும், வில்லனாக நடிக்கும் படங்கள் ஹிட் அடித்து வருகின்றன. ராயன் படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் லுக்கை விட எஸ்.ஜே. சூர்யா லுக் சிறப்பாக உள்ளது என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

Published by
Saranya M

Recent Posts