Categories: Cinema News latest news

சிவகார்த்திகேயனின் அந்த சூப்பர்ஹிட் படம் தனுஷுக்காக தான் உருவானது… ஆனால்? இயக்குனர் சொன்ன ஆச்சரிய தகவல்…

Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கோலிவுட்டில் சரியான ஹிட்டை  கொடுத்து நடிகராக மாற்றியவர் தனுஷ் தான். ஆனால் அவர் ஒரு சூப்பர்ஹிட் படத்தினையே சிவாவிற்கு கொடுத்த சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களை ஆங்கர் செய்து வந்தவர் சிவகார்த்திகேயன். தன்னுடைய ஆன் டைம் காமெடிகளால் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார். நேரடியாக சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்தார். தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் அவரின் நண்பராக சில காட்சிகளில் நடித்திருப்பார்.

இதையும் படிங்க:பெரிய நடிகர்கள்.. பல கோடி பட்ஜெட்!.. வரிசை கட்டி நிற்கும் 10 படங்கள்!.. எல்லாமே இந்த வருஷம் ரிலீஸ்!

அதைத் தொடர்ந்து மனங்கொத்தி பறவை, மெரினா உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். அப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றாலும் பெரிய அளவில் சிவகார்த்திகேயனுக்கு ரீச்சை வாங்கி கொடுக்கவில்லை.  இதை தொடர்ந்து தனுஷ் தயாரிப்பு வெளியான எதிர்நீச்சல் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து தன்னுடைய முதல் ஹிட் திரைப்படத்தை கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் உயர்ந்திருக்கிறார். இப்படி ஒரு வளர்ச்சியை கொடுத்த எதிர்நீச்சல் திரைப்படம் முதலில் தனுஷ்காக தான் உருவாக்கப்பட்டதாம். இதுகுறித்து துரை செந்தில்குமார் கூறும்போது, தனுஷ் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு இயக்குனர் வேண்டும் எனக் கேட்டு இருந்தார்.

இதையும் படிங்க: சத்யராஜ் போட்ட கண்டிஷன்… அதிகாலையில் துப்பாக்கியுடன் நின்ற தயாரிப்பாளர்…

அந்த சமயத்தில் இதுகுறித்து வெற்றிமாறன் சார் என்னிடம் சொன்னார். அந்த சமயத்தில் எதிர்நீச்சல் திரைப்படத்தினை கதையை தனுஷிற்காக எழுதி வைத்து இருந்தேன். அந்த கதையை கொடுக்கும்போது அவருக்கும் பிடித்து இருந்தது. அதனால் அந்த படத்தில் சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்து வெளியிட்டார் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Published by
Akhilan