தனுஷுடன் நேரடியாக மோதிய சிவகார்த்திகேயனின் 16 படங்கள்!.. ஜெயிச்சது யார் தெரியுமா?..

Published on: February 4, 2024
Dhanush- SK
---Advertisement---

நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் 16 முறை நேரடியாக மோதியுள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம். நடிகர் தனுஷ் சினிமாவில் அறிமுகமாகி 10 வருஷம் கழித்துத் தான் நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுகம் ஆனார். ஆனால் தற்போது தனுஷோடு போட்டிப் போடுற அளவுக்கு சிவகார்த்திகேயன் வளர்ந்து விட்டார். ஒரு காலத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்கள். 3 படத்தில் தனுஷின் நண்பராக சிவகார்த்திகேயன் தான் வருவார். ஆனால் இப்போது அவரையே ஓவர்டேக் பண்ணும் அளவு சிவகார்த்திகேயன் வளர்ந்து இருப்பது தான் ஆச்சரியம்.

முதன்முதலில் 2002 பிப்ரவரியில் தனுஷ்க்கு 3 என்ற படமும், சிவகார்த்திகேயனுக்கு மெரினா படமும் ரிலீஸானது. இதுதான் சிவகார்த்திகேயன் ஹீரோவான முதல் படம். இவற்றில் தனுஷ் படம் தான் ஹிட்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் – மரியான்

VVS-Mariyan
VVS-Mariyan

2013 மே மாதம் சிவகார்த்திகேயனுக்கு எதிர்நீச்சல் படமும், தனுஷ_க்கு அம்பிகாபதி படமும் ரிலீஸ். இதுல சிவகார்த்திகேயன் படம் தான் ஹிட். 2013 ஜூலையில் சிவகார்த்திகேயனுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படமும், தனுஷ_க்கு நய்யாண்டி, மரியான் ஆகிய படங்களும் ரிலீஸ். இதுல சிவகார்த்திகேயன் படம் தான் பிளாக் பஸ்டர் ஹிட்.

2015 பிப்ரவரியில் தனுஷ_க்கு அநேகன் படமும், சிவகார்த்திகேயனுக்கு காக்கி சட்டை படமும் ரிலீஸ். இதுல ரெண்டு படமுமே ஹிட் தான். 2015 டிசம்பரில் சிவகார்த்திகேயனுக்கு ரஜினி முருகன் படமும், தனுஷ_க்கு தங்கமகன் படமும் ரிலீஸ். இதுல ரஜினி முருகன் தான் மெகா ஹிட்.

வடசென்னை – சீமராஜா

2016 செப்டம்பரில் சிவகார்த்திகேயனுக்கு ரெமோ படமும், தனுஷ_க்கு தொடரி, கொடி என்று 2 படங்களும் ரிலீஸ். இதுல கொடி படமும் ஹிட் தான். ஆனாலும் ரெமோ தான் பிளாக் பஸ்டர் ஹிட். 2018 செப்டம்பரில் தனுஷ_க்கு வடசென்னை படமும், சிவகார்த்திகேயனுக்கு சீமராஜா படமும் ரிலீஸ். இதுல வடசென்னை தான் பிளாக் பஸ்டர் ஹிட்.

அசுரன் – நம்ம வீட்டு பிள்ளை 

Asuran-NVP
Asuran-NVP

2018 டிசம்பரில் தனுஷ_க்கு மாரி 2 படமும், சிவகார்த்திகேயனுக்கு கனா படமும் ரிலீஸ். இதுல கனா தான் ஹிட். மாரி 2ல் யுவனின் இசையில் வந்த ரவுடி பேபி பாட்டு மிகப்பெரிய ஹிட். 2019 மே மாதம் தனுஷுக்கு The Extraordinary Journey of the Fakir படமும், சிவகார்த்திகேயனுக்கு மிஸ்டர் லோக்கல் படமும் ரிலீஸ். இதுல ரெண்டுமே பிளாப்.

2019 செப்டம்பரில் தனுஷ_க்கு அசுரன் படமும், சிவகார்த்திகேயனுக்கு நம்ம வீட்டு பிள்ளை படமும் ரிலீஸ். இதுல அசுரன் தான் பிளாக் பஸ்டர் ஹிட். 2019 நவம்பரில் தனுஷுக்கு என்னை நோக்கி பாயும் தோட்டா படங்களும் டிசம்பரில் சிவகார்த்திகேயனுக்கு ஹீரோ படமும் வெளியானது. இரண்டு படங்களுமே சரியாக போகவில்லை.

டாக்டர் – கலாட்டா கல்யாணம்

2021 அக்டோபரில் சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் படமும், தனுஷ_க்கு அத்ராங்கிரே படமும் ரிலீஸ். தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் ரிலீஸானது. இதுல டாக்டர் படம் தான் வெற்றி. இந்தப் படம் 100 கோடிக்கு மேல் வசூலித்தது.  2022 மார்ச்ல தனுஷ_க்கு மாறன் படமும், சிவகார்த்திகேயனுக்கு டான் படமும் ஹிட். இதுல டான் தான் வெற்றி.

கேப்டன் மில்லர் – அயலான்

2022 செப்டம்பரில் தனுஷ_க்கு நானே வருவேன், திருச்சிற்றம்பலம் படமும், சிவகார்த்திகேயனுக்கு பிரின்ஸ் படமும் ரிலீஸ். இதுல திருச்சிற்றம்பலம் தான் வெற்றி. 2017 ஆகஸ்டுல தனுஷ_க்கு வேலையில்லா பட்டதாரி 2 படமும், சிவகார்த்திகேயனுக்கு வேலைக்காரன் படமும் ரிலீஸ். இதுல வேலைக்காரன் தான் பிளாக் பஸ்டர் ஹிட். 2024 பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர் படமும், சிவகார்த்திகேயனுக்கு அயலான் படமும் ரிலீஸ். இவற்றில் இரண்டுமே எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.