சொந்த சரக்குனா தில்லா இறங்கலாம்! தனுஷ் தயக்கம் காட்டுவதன் காரணம் இதுதானா?
Dhanush: ராயன் படத்தின் வெற்றிக்களிப்புடன் தற்போது தனுஷ் இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் ராயன். இது அவருக்கு 50 வது திரைப்படம். முழுக்க முழுக்க வன்முறை காட்சிகளுடன் வெளியான இந்த ராயன் திரைப்படத்தை பல பேர் பல விதமாக விமர்சனம் செய்தனர். இருந்தாலும் படம் ஓரளவு மக்களை திருப்திப்படுத்தியதாகவே தெரிகிறது.
இந்த படத்தின் வெற்றிக்கு பரிசாக சமீபத்தில் கூட தனுஷுக்கு படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இரண்டு காசோலைகளை வழங்கி இருந்தார். இயக்குனர் மற்றும் நடிகர் என்ற வகையில் இரண்டு காசோலைகள் அவருக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. சமீப காலமாக தனுஷ் நடித்து வெளியாகும் திரைப்படங்கள் சமூக பார்வை கொண்ட திரைப்படங்களாகவே அமைந்து வருகின்றன.
இதையும் படிங்க: பரோட்டாவுக்கு மாவு பிசைஞ்சது வேஸ்ட்டா? கண்டீசனுடன் களமிறங்கும் விஜய்சேதுபதி
அசுரன் படத்தில் தொடங்கி இப்போது வெளியான ராயன் திரைப்படம் வரைக்கும் அன்றாடம் நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் போராட்டங்கள் குறித்த கதைகளை மையப்படுத்தி தனுஷ் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து அவருக்கு எதிராக ரெட் அலர்ட் போடப்பட வேண்டும் என்ற ஒரு பேச்சும் அடிபட்டு வந்தது.
இப்போது வந்த தகவலின் படி தயாரிப்பாளர் முரளி ராமசாமி உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துக் கொடுத்து விடலாமே என தனுஷை சுற்றி இருக்கும் நபர்கள் சொல்லி வருவதாக தெரிகிறது. ஆனால் தனுஷ் அதற்கு சம்மதம் தெரிவிப்பதாக தெரியவில்லை. மிகவும் தயக்கம் காட்டி வருகிறாராம். இதற்கு பின்னணியில் ஒரு காரணமே இருக்கிறதாம்.
இதையும் படிங்க:ஓடிடியில் மாஸ் காட்டிய ஹார்ட் பீட்… கடைசியில் இப்படி பண்ணிட்டீங்களே? சோகத்தில் ரசிகர்கள்…
பாதி எடுக்கப்பட்டு இருக்கும் அந்த படத்தை இப்போது மீண்டும் தொடர்ந்தால் நினைத்த அளவு படம் வராது என்று தனுஷ் நினைப்பதாக தெரிகிறது. ஏனெனில் ஏற்கனவே எடுக்கப்பட்ட அந்த படத்தின் காட்சிகள் இப்போது வெளியாகும் ஒரு சில திரைப்படங்களில் இருப்பதாகவும் கூறுகிறாராம் தனுஷ். அதனால் தான் இந்த படத்தில் நடித்து அது வெளியானாலும் மக்கள் இது அந்த படத்தின் காப்பி .
இந்த படத்தின் காப்பி என்று தான் சொல்வார்கள் என நினைத்தே தனுஷ் தயக்கம் காட்டுவதாக தெரிகிறதாம். இதைப் பற்றி கோடம்பாக்கத்தில் உள்ளோர் சிலர் சொந்த ரசனையாக இருந்தால் யோசிக்க வேண்டியதில்லை. நம்மை விட்டு அது எங்கும் போகவாய்ப்பில்லை. இவரே பல படங்களின் இன்ஸ்பிரேஷனை வைத்து தான் எடுத்து இருப்பார். மற்றவர்களும் அதைத்தானே செய்வார்கள். அப்படி இருக்கும் போது ஒரே காட்சிகள் பல படங்களில் வரவும் வாய்ப்பிருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.
இதையும் படிங்க: தொடர் தோல்விகளால் துவண்ட லைகா… ரஜினி, அஜீத் செய்த அந்த விஷயம்…!