கொல பசியில் இருக்கும் தனுஷ்! மீண்டும் தீனி போடக் காத்திருக்கும் அந்த கில்லர் இயக்குனர்

Published on: August 20, 2023
dhanush
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு பெருமை மிகு நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரின் வளர்ச்சி அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறது. இப்ப உள்ள இளம் தலைமுறை நடிகர்கள் தனுஷின் ஈடுபாட்டை பார்த்தாலாவது ஏகப்பட்ட விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும்.

ஆரம்பத்தில் கோடம்பாக்கம் உட்பட அனைவருமே தனுஷை வெறுத்து ஒதுக்கினார்கள். ஒரு சினிமா பின்னனியில் இருந்து வந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக விட்டு வைத்தனர். அந்த அளவுக்கு கடுமையாக விமர்சிக்கப்பட்டார் தனுஷ்.

ஆனால் படிப்படியாக எந்த விமர்சனத்தையும் காதில் போற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து பல படங்களில் நடித்து இன்று தன்னுடைய 50வது படத்தில் வந்து நிற்கின்றார். விஜய், அஜித் இவர்களே இப்பொழுது தான் 60ஐ அடைந்திருக்கின்றனர்.

இதையும் படிங்க :அந்தப் பட்டத்திற்கு தகுதியான ஆளே இல்லை! ‘சூப்பர் ஸ்டார்’ குறித்து நச் என பதிலடி கொடுத்த சத்யராஜ்

ஆனால் தனுஷ் இந்த சின்ன வயதிலேயும் அரை சதம் அடித்து விட்டார். சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

மேலும் ஆன்மீகம் , புத்தகம் என தன்னுடைய சிந்தனையை சினிமா நேரம் தவிர்த்து செலவிட்டு வருகிறார். அதன் காரணமாகவே செல்போன் பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டாராம். இப்போது தனுஷ் அருண் மாதேஸ்வரன் நடிப்பில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க : சொந்த மகன்களுக்கே கிடைக்காத ஒரு கௌரவத்தை ரஜினிக்கு கொடுத்த சிவாஜி! பதறி போய் திகைத்த சூப்பர் ஸ்டார்

இந்த நிலையில்  மீண்டும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனது சொந்த தயாரிப்பிலேயே மற்றுமொரு புதிய படத்தில் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது. இதை கேட்டு ரசிகர்கள் இன்னும் கொலை வெறியில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அருண்மாதேஸ்வரன் படம் என்றால் துடி துடிக்க வெட்டுக் குத்துக் காட்சி, திரில்லர் , என படு பயங்கரமாக இருக்கும். இதில் அசுரனை மீண்டும் இணைத்துக் கொண்டால் சும்மாவா இருக்கும்?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.