Connect with us
sathya

Cinema News

அந்தப் பட்டத்திற்கு தகுதியான ஆளே இல்லை! ‘சூப்பர் ஸ்டார்’ குறித்து நச் என பதிலடி கொடுத்த சத்யராஜ்

சினிமாவை தாண்டி மற்றத் துறைகளிலும் ஏதாவது ஒரு இலக்கை அடைவதற்காகவே ஓடிக் கொண்டிருக்கிறோம். அதற்கான உழைப்பிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். திடீரென அந்த இலக்கில் தோல்வி ஏற்பட்டால் துவண்டு விடுகிறோம். இதே நிலைமைதான் இப்போது சினிமாவிலும்.

சினிமாவில் சமீபகாலமாக பட்டத்திற்கு போட்டி போட்டு நடிகர்கள் திணறி வருகின்றனர். அவர்களுக்குள் போட்டி இல்லாவிட்டாலும் அவர்களை சார்ந்த ரசிகர்கள் இந்த போட்டியை ஏற்படுத்தி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டுமே என அப்பொழுது இருந்து இன்று வரை யாரை கேட்டாலும் சொல்வார்கள்.

இதையும் படிங்க : சொந்த மகன்களுக்கே கிடைக்காத ஒரு கௌரவத்தை ரஜினிக்கு கொடுத்த சிவாஜி! பதறி போய் திகைத்த சூப்பர் ஸ்டார்

ஆனால் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அவர்கள் ரசிகர்கள் சண்டை போட்டுக் கொண்டு வருகின்றனர். இதை விஜய் நினைத்தால் தடுத்து நிறுத்த முடியும். ஆனால் இந்தப் பிரச்சினை ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை அவர் அதை பற்றி எதுவுமே வாய்திறக்காமல் இருப்பதுதான் பல பேருக்கு கோபத்தை வரவழைத்திருக்கிறது.

இந்த நிலையில் சத்யராஜ் அவர் நடித்த அங்காரகன் என்ற படத்தின் புரோமோஷனுக்காக ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது இந்தப் பட்டம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சத்யராஜ் எனக்கு கொடுத்த புரட்சித்தமிழன் என்ற பட்டத்திற்கே உடன்பாடு இல்லை என்றும் ,

இதையும் படிங்க :சும்மா கிடங்கப்பா! வரலாற்றில் முத்திரை பதிச்சாச்சு – ‘லியோ’ படத்தால் விஜய் செய்த சாதனை

அதில் தமிழன் என்பதை வேண்டுமென்றால் ஏற்றுக் கொள்வேன், ஆனால் புரட்சிங்கிறது நான் என்ன அப்படி புரட்சி பண்ணிட்டேன். அதனால் அந்தப் பட்டத்திற்கு  நான் தகுதியான ஆளே இல்லை என்று கூறினார். மேலும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும்தான் என்றும் யார் அதிக சம்பளம் வாங்குகிறார்களோ அவர்கள் தான் சூப்பர் ஸ்டார் என்றும் பதில் கூறினார்.

இன்னொரு ஆளு பட்டத்தை யாரும் சீக்கிரம் பெற்று விட முடியாது என்றும்  மக்கள் திலகம் என்றால் அது எம்ஜிஆர் மட்டும்தான். அந்த மக்கள் திலகம் பட்டத்தை வேறு யாருக்காவது கொடுக்க முடியுமா? என்றும் கேட்டிருந்தார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top