விக்ரமை இப்படி பாராட்டிட்டாரே தனுஷ்!.. தங்கலானுக்கு எப்படி வாழ்த்து சொல்லி இருக்கார் பாருங்க!..

by சிவா |   ( Updated:2024-08-14 16:42:45  )
chiyan vikram
X

Thangalaan: தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்கள் என கணக்கெடுத்தால் கமலுக்கு பின் விக்ரமும், தனுஷும் இருக்கிறார்கள். இருவருமே கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் அவ்வப்போது நடிப்புக்கு தீனி போடும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள். விக்ரம் பிதாமகன், ஐ என கலக்கி இப்போது தங்கலானில் வந்து நிற்கிறார்.

தங்கலான் படத்தில் விக்ரமின் தோற்றத்தை பார்த்தாலே வித்தியாசமான தோற்றங்களில் நடிப்பதில் அவருக்கு இருக்கும் ஆர்வம் நமக்கு புரியும். இதற்கு முன் பிதாமகன் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து தேசிய விருதை வாங்கினார். 'ஐ' படத்தில் உடலில் 50 சதவீத எடையை குறைத்து கூன் விழுந்தது போல் நடித்து அதிர வைத்தார்.

சினிமா உலகில் உடலை வருத்திக்கொண்டு நடிப்பதில் விக்ரமை யாரும் தொடவே முடியாது. அவ்வளவு ஏன்? கமல் கூட அதை செய்ய மாட்டார். கமல் வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் மேக்கப்பில் ஆர்வம் காட்டுவார். ஆனால், விக்ரம் உடலை வருத்திக்கொண்டு நடிப்பார்.

thangalaan

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் அவரின் தோற்றமே ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சுதந்திரம் வாங்குவதற்கு முன் கர்நாடகாவில் உள்ள தங்க சுரங்கத்தில் வேலை செய்த தமிழர்களின் பிரச்சனையை இப்படம் பேசுகிறது.

கண்டிப்பாக இப்படம் விக்ரமுக்கு பல விருதுகளை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் ஆகஸ்டு 15ம் தேதியான நாளை உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தங்கலான் படத்திற்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

twitt

தனது டிவிட்டர் பக்கத்தில் ‘எனக்கு தெரிந்த மிகவும் கடின உழைப்புடன் கூடிய நடிகர் சியான் விக்ரம் சார் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள தங்கலான் படத்திற்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்’ என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதையடுத்து விக்ரம் ரசிகர்கள் தனுஷுக்கு நன்றி சொல்லி வருகிறார்கள்.

இதையும் படிங்க: டீ கப் தீண்டாமை பேசி ட்ரோலில் சிக்கிய பா.ரஞ்சித்!.. தங்கலான் ரிலீஸ் நேரத்தில் இது தேவையா?..

Next Story