லால் சலாம் படத்துக்கு புரமோஷன் பண்ணும் தனுஷ்!.. என்ன இருந்தாலும் பாசம் போகாது போல!...

by சிவா |   ( Updated:2024-02-09 03:03:38  )
dhanush
X

Aishwarya dhaush: நடிகர் ரஜினிகாந்தின் மூத்தமகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டது எல்லோருக்கும் தெரியும். இதில் ரஜினிக்கு விருப்பமில்லை என்றாலும் மகள் உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி அந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு 2 மகன்களும் பிறந்தனர்.

இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்ததில் ரஜினிக்கும் மகிழ்ச்சி. ஆனால், 17 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தபின் இருவரும் பிரிவதாக அறிவித்து எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்தனர். இருவரையும் சேர்த்து வைக்க இரு தரப்பிலும் எடுக்கப்பட்ட முயற்சிகள் எடுபடவில்லை. மகன்கள் லிங்கா, யாத்ரா இருவரும் தனுஷுஷுடன் சில நாள், அம்மா ஐஸ்வர்யாவுடன் சில நாட்கள் என மாறி மாறி வாழ்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: எனக்கு யார் கூடவும் தொடர்பில்லை… சுச்சி லீக்ஸால் என் வாழ்க்கையே போச்சு… கலங்கிய ஹிட் நாயகி…

தனுஷ் கலந்து கொள்ளும் சினிமா நிகழ்ச்சிகளில் அவரின் மகன்களும் கலந்துகொள்கிறார்கள். அதேபோல், ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்திருக்கும் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர்கள் இருவரும் கலந்து கொண்டார்கள். ஐஸ்வர்யாவும் தனது கவனத்தை சினிமா இயக்குவதில் திருப்பினார்.

தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்துவிட்டாலும் ஐஸ்வர்யா செய்யும் அனைத்து விஷயங்களுக்கும் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் நடன இயக்குனராக இருக்கும் ஜானி மாஸ்டரை வைத்து ஐஸ்வர்யா எடுத்த ஒரு ஆல்பம் பாடலுக்கும் தனுஷ் சொல்லியிருந்தார். அவருக்கு ஐஸ்வர்யாவும் நன்றி சொன்னார்.

அதேபோல், சில நாட்களுக்கு முன்பு லால் சலாம் இசை வெளியீட்டின் போதும் தனுஷ் லால் சலாம் படக்குழுவினருக்கு வாழ்த்து சொன்னார். இந்நிலையில், லால் சலாம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் தனது டிவிட்டர் பக்கதில் ‘லால் சலாம் இன்று முதல்’ என பதிவிட்டிருக்கிறார் தனுஷ்.

twitter

ஐஸ்வர்யாவை பிரிந்தாலும் அவருக்கு அடிக்கடி வாழ்த்து சொல்லி நல்ல பெயரை வாங்கி வருகிறார். என்ன இருந்தாலும் மனைவி மற்றும் மாமனார் ரஜினி மீது தனுஷ் பாசமாகவே இருக்கிறார் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story