More
Read more!
Categories: Cinema News latest news

ஒரே நாளில் ஊத்தி மூடிய அஜித்தின் ரீ ரிலீஸ் படங்கள்!.. ‘தல’ ஆட்டம் ஒரு நாள் கூட தாண்டலையே பாஸ்!..

அஜித் நடித்த வலிமை திரைப்படம் முதல் நாளில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியதாக இன்னும் அஜித் ரசிகர்கள் தம்பட்டம் அடித்து வருகின்றனர். ஆனால், முதல் நாளுக்கு பிறகு அந்தப் படத்தின் வசூல் பெரிதளவில் இல்லை. அதே நிலை தான் தற்போது அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான தீனா மற்றும் பில்லா படங்களின் ரீ ரிலீஸ் நிலமையும் எனக் கூறுகின்றனர்.

நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாள் மே 1-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதுவரை பிறந்தநாள் கொண்டாட்டம் புகைப்படங்கள் கூட வெளியாகவில்லை. மேலும், விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் அப்டேட்களும் வெளியாகவில்லை.

Advertising
Advertising

இதையும் படிங்க: ‘பில்லா’ படத்தில் நமீதாவை ஏமாற்றிய அஜித்! 16 வருஷம் கழிச்சு வெளிச்சத்திற்கு வந்த உண்மை

அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக தீனா மற்றும் பில்லா படங்கள் ஒரே நாளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் வசூல் செய்யவில்லை. முதல் நாளில் சென்னையில் உள்ள திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் கூட்டமாக கூடி படத்தை கொண்டாடினர்.

ரோகிணி தியேட்டருக்கும் பட்டாசு வெடித்து அஜித் ரசிகர்கள் பிரச்சனை செய்த நிலையில், எந்தவொரு பாடலையும் ஒன்ஸ்மோர் போடவில்லை என்றும் அஜித் ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: அனுபமா போரடிச்சுடுச்சு!.. அடுத்து அந்த ஹீரோயின் உதட்டை கடிக்க துடிக்கும் டில்லு ஸ்கொயர் ஹீரோ?..

கில்லி படத்தை கச்சேரி போல கடந்த இரண்டு வாரங்களாக தியேட்டர்கள் நடத்தி வந்த நிலையில், முதல் நாளிலேயே அஜித்தின் தீனா மற்றும் பில்லா படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத நிலையில், ஒட்டுமொத்தமாக முதல் நாள் வசூல் ஒன்று முதல் இரண்டு கோடி ரூபாய் மட்டுமே வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதில் கொடுமை என்னவென்றால் இரண்டாம் நாள் தீனா மற்றும் பில்லா படங்களுக்கு கூட்டமே இல்லாததால் பல காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், டிரெண்டிங்கிலும் தீனா மற்றும் பில்லா படங்களை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்யவில்லை.

இதையும் படிங்க: நான் கேட்டவுடனே சம்பளத்தை யாரும் தூக்கி கொடுத்துட மாட்டாங்க!.. அந்த கேள்வியால் டென்ஷனான கவின்!..

Published by
Saranya M

Recent Posts