Nayanthara: தனுஷ் விஷயத்தில் மட்டுமல்ல... அப்பவே தெலுங்கு நடிகரை பங்கம் பண்ணின நயன்தாரா..!
தனுஷ், நயன்தாரா இருவருக்கும் இடையே பிரச்சனை போய்க்கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். திருமண ஆவணப்படத்தில் நானும் ரௌடி தான் படப்பாடலில் இருந்து 3 வினாடி காட்சிக்காக தனுஷ் 10 கோடி கேட்கிறாரே என்று நயன்தாரா 3 பக்க அறிக்கையில் பொரிந்து தள்ளி விட்டார்.
Also read: Good Bad Ugly:கெரியர் பெஸ்ட்டா இருக்கும்.. ‘குட் பேட் அக்லி’ பற்றி ஜிவி போட்ட பதிவு! செம அப்டேட்
தொடர்ந்து ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் வெளியான போது நானும் ரௌடி தான் படத்தில் இருந்து 23 வினாடிகளுக்குக் காட்சிகள் இடம்பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற திருமணவிழா ஒன்றில், தனுஷின் அருகிலேயே இருக்கையைப் போடச் சொல்லி கால் மேல் கால் போட்டுக் கெத்தாக உட்கார்ந்து இருந்தார். தொடர்ந்து தனுஷூம் இந்த பிரச்சனைக்காக வழக்கு தொடர்ந்தார்.
அந்த வகையில் பிரச்சனை நயன்தாரா தனுஷிடம் எதுவும் கேட்காமலேயே அவரது படத்தில் இருந்து காட்சிகளை எடுத்துப் பயன்படுத்தலாம் என்று சர்ச்சை எழுந்தது. ஆனால் நயன்தாரா தரப்பில் தனுஷிடம் இதுதொடர்பாக 2 ஆண்டுகளாக அனுமதி கேட்டும் தரவில்லை என்று சொல்லப்பட்டது. இந்தப் பிரச்சனை கோர்ட்டுக்கு வந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு நயன்தாரா பதிலளிக்க உத்தரவும் பிறப்பித்துள்ளது.
இப்போது தனுஷூக்கு நெருக்கடி கொடுத்தது பெரிய விஷயம் தான். ஆனால் அப்பவே தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜூனுக்கு நயன்தாரா நோஸ்கட் கொடுத்துள்ளார். என்னன்னு பாருங்க.
முன்னாடி ஒரு சைமா விருது வழங்கும் விழா மேடையில் நயன்தாராவுக்கு விருது கொடுக்கப்பட்டது. இதற்கான விருதை தெலுங்கு திரையுலக முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் கொடுக்க வருகிறார். அதை வாங்கும்போது, இந்த விருதை நான் விக்னேஷ் சிவன் கையால வாங்கணும்னு விரும்புறேன் என்று நயன்தாரா சொல்லி விட்டார்.
Also read: அடேங்கப்பா!.. காமெடி கிங் பிரம்மானந்தம் செய்த சாதனை!.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற பெருமை!..
இதனால் அல்லு அர்ஜூனுக்கு ஒரு மாதிரியாகி விட்டது. அதன்பிறகு விக்னேஷ் சிவன் வந்து அந்த விருதைக் கொடுக்கிறார். இது போன்று முதல்லயே நயன்தாரா விக்னேஷ் சிவன் கையால் தான் விருது வாங்க வேண்டும் என்று தெரிந்து இருக்கும் அல்லவா.
அதனால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் முன்னாடியே இதை சொல்லி இருந்தால் அல்லு அர்ஜூனுக்கு அந்த இடத்தில் அவமானம் ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம் அல்லவா என வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
நீங்க சொன்னது உண்மை தான். நயன்தாரா மட்டும் இல்லாம பல கலைஞர்களும் மேடையில இதைச் செய்றாங்க. அதைத் தவிர்த்தாங்கன்னா நல்லாருக்கும் என்றார்.