More
Read more!
Categories: Cinema News latest news

தல தளபதி இணையும் புதிய படம்! சூப்பரான தகவலை வெளியிட்ட ஷோபா சந்திரசேகர் – ரெமோ லுக்கிற்கான ரகசியம் இதுதானா?

Thala Thalapathy: சினிமாவை பொறுத்தவரைக்கும் தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் அஜித். தன்னை பேர் சொல்லியே கூப்பிடுங்கள். தல என்று அழைக்க வேண்டாம் என அஜித் எத்தனை முறை சொல்லியும் ரசிகர்கள் அதை கேட்பதாக இல்லை.

அந்தளவுக்கு அஜித்தின்  மீது வெறித்தனத்தனமான அன்பை வைத்திருக்கின்றனர். அதை போல கிரிக்கெட்டில் தல என செல்லமாக அழைக்கப்படுபவர் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி. உலக கோப்பையை பெற்றுத்தந்த பெருமை, பல போட்டிகளில் சாம்பியன் கோப்பையை பெற்றுத்தந்த பெருமை என பல சமயங்களில் இந்திய அணிக்காக ஒரு பில்லராக இருந்திருக்கிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: அடேய் நீங்க படிச்ச ஸ்கூல நான் ஹெட்மாஸ்டருடா… யுகிக்கவே முடியாத ஒரு ஸ்கெட்ச் தான் லியோ…

இந்த நிலையில் தனது மனைவியின் மூலமாக ஒரு தயாரிப்பு கம்பெனியை ஆரம்பித்து தமிழில் முதன் முதலில் ஹரீஸ் கல்யாணை வைத்து ஒரு படத்தை எடுத்தார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை.

ஆனால் ஆரம்பத்தில் விஜயை வைத்துதான் படத்தை தயாரிக்க போவதாக ஒரு பேச்சு எழுந்தது.  இதை நம்பும் விதத்தில் தோனியுடன் விஜய் இருக்கிறமாதிரியான புகைப்படங்களும் வெளியாகின. ஆனால் அதெல்லாம் வதந்தி என்று பிறகு தெரிந்தது.

இதையும் படிங்க: வாவ் செம மெர்சலா இருக்கே!.. தலைவர் 170 லுக்குல ரஜினிய பாருங்க!.. வெளியான புகைப்படம்..

இந்த நிலையில் நேற்று முழுவதும் தோனியின் புகைப்படம் ஒன்று வைரலானது. அந்தப் புகைப்படத்தில் படு ஸ்மார்ட்டாக விக்ரமின் ரெமோ லுக்கில் தோனி இருந்தது அனைவரையும் ஈர்த்தது.

இதை பார்த்து ரசிகர்கள் தலயும் தளபதியும் அடுத்தப் படத்தில் இணைய வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்விகளை X தளத்தில் முன்வைத்தனர். அதற்கு விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் தளபதி69 என்று பதில் கூறியிருந்தார். உடனே ரசிகர்கள் இந்த பதிலுக்கு செம தகவல், தளபதி69க்காக வெயிட்டிங் என்று பதிவிட்டு வந்தனர்.

இதையும் படிங்க: மனைவியுடன் நடிச்சு அந்த படம் ஓடவே இல்லை!.. ராவணனை விட மோசமா மாறிய ரன்பீர் கபூ?..

விஜய் தற்போது வெங்கட் பிரபுவுடன் தன்னுடைய 68வது படத்தில் இணைந்திருக்கிறார். இந்தப் படத்திற்கு பிறகு ஒரு  மூன்று வருடங்கள் பிரேக் எடுக்கப்போவதாக விஜய் அறிவித்திருந்தார். அடுத்ததாக தனது 69வது படத்தில் இணைவார் என்று தெரிகிறது.

Published by
Rohini

Recent Posts