Connect with us

Cinema News

அடேய் நீங்க படிச்ச ஸ்கூல நான் ஹெட்மாஸ்டருடா… யுகிக்கவே முடியாத ஒரு ஸ்கெட்ச் தான் லியோ…

Leo: விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படம் குறித்த பேச்சு தான் கோலிவுட் வட்டாரத்தினை சுற்றி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. நாளுக்கு நாள் இந்த படத்தின் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தியாக வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது.

இப்படத்தில் இரண்டு சிங்கிள் தான் இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில் விஜய் த்ரிஷாவுக்காக ஒரு காதல் பாடலும் இருக்கிறதாம். அந்த சிங்கிளை வரும் வாரங்களில் ரிலீஸ் செய்யும் முடிவில் படக்குழு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் ஆடியோ ரிலீஸ் போன கடுப்பில் இருந்த ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதியாகி இருக்கின்றனர்.

இதையும் படிங்க:ஓவர் சீன் போடாதீங்க!.. நாங்க இல்லாம நீங்க இல்ல!.. விஜய் மீது காண்டான பயில்வான் ரங்கநாதன்…

வரும் வாரத்தில் லியோ படக்குழு ஒரு பெரிய பிரஸ்மீட்டை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால் இதுவும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தரப்பில் இருந்து இன்னும் எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. இதுவும் சில சினிமா வட்டாரத்தில் இருந்து வெளிவந்த தகவலாக தான் பார்க்கப்படுகிறது.

லியோ படத்தின் ட்ரைலரை படக்குழு அக்டோபர் 5ந் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. மேலும் சென்னையின் பல இடங்களில் தனி ஸ்க்ரீனை அமைத்து லியோ ட்ரைலரை ரிலீஸ் செய்யவும் லலித் ஐடியா செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: அம்ருதாவை நெருங்கிய கணேஷ்…! மருத்துவமனை வந்த ராதிகா… அதிர்ச்சியில் மாலினி..!

இந்நிலையில் லியோ ட்ரைலரில் இருந்து நம்மால் எந்த கதையை யுகிக்க முடியாத வகையில் ரெடி செய்ய வேண்டும் என லோகேஷ் கனகராஜ் ஐடியா செய்திருக்கிறாராம். பொதுவாகவே மாஸ்டரில் தொடங்கி விக்ரம் என எந்த ட்ரைலரும் ஒரு ஐடியாவை கொடுக்கவில்லை.

ஆனால் லியோவிற்கு இன்னும் அதிகமாக ட்விஸ்ட் வைத்தால் தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் ட்ரைலரில் நிறைய ட்விஸ்ட்டினை எதிர்பார்க்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாரத்தினர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top