Connect with us

Cinema News

கையில பத்து பைசா இல்லை!.. இன்னைக்கும் துருவ நட்சத்திரம் ரிலீஸ் இல்லை.. கலங்கிய கவுதம் மேனன்!..

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம், சிம்ரன், ரிது வர்மா, டிடி நீலகண்டன், பார்த்திபன், விநாயகம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள துருவ நட்சத்திரம் நவம்பர் 24ம் தேதியான இன்று வெளியாகி விடும் என படக்குழுவினர் உறுதியாக இருந்தனர்.

ஆனால், நேற்று மாலை வரை டிக்கெட் புக்கிங் தொடங்காமல் இருந்த போதே துருவ நட்சத்திரம் இந்த முறையும் டவுட்டு தான் என மீம்கள் பறக்க ஆரம்பித்தன. கடைசியாக உயர்நீதிமன்றம் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இன்று காலை 10.30 மணிக்குள் 2.40 கோடி ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு படத்தை வெளியிடலாம் என நிபந்தனை விதித்து இருந்தது.

இதையும் படிங்க: நீ மாமனிதன் இல்லை!.. இன்று முதல் மாமாமனிதன்!.. இயக்குனர் சீனு ராமசாமியை பங்கம் பண்ணும் புளூ சட்டை!..

இந்நிலையில், அந்த பணத்தை எப்படியாவது இயக்குனர் கவுதம் மேனன் புரட்டி எடுத்துக் கொடுத்து ஒரு வழியாக ஜான் என்ட்ரியை மக்களுக்கு காட்டுவார் என ரசிகர்கள் பெரிதும் ஆவலாக காத்திருந்தனர்.

ஆனால், கடைசி நேரத்தில் இன்று துருவ நட்சத்திரம் படம் வெளியாகாது என்றும் இன்னும் சில தினங்களில் அந்த படத்தை வெளியிடுவதற்கான வேலைகளை செய்கிறேன். மன்னிக்கவும் என கனத்த இதயத்துடன் கவுதம் மேனன் போஸ்ட் ஒன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

இதையும் படிங்க: இப்படி ஆகிப்போச்சே!.. எல்லாத்துக்கும் அவர்தான் காரணமாம்!.. விடாமுயற்சி சூடான அப்டேட்..

பல வருடங்களாக உருவாகி உள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் கடைசி நேரத்தில் இப்படி ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போவது தொடர்கதையாகி வருவது வேதனையளிக்கிறது என ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வாரம் மிஸ்ஸான துருவ நட்சத்திரம் அடுத்த வாரமாவது ரிலீஸ் ஆகுமா? அல்லது அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகுமா? கவுதம் மேனன் அந்த 2.40 கோடி ரூபாயை பணத்தை தர முடியாத அளவுக்கு உள்ளாரா? என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

google news
Continue Reading

More in Cinema News

To Top