More
Categories: Cinema News latest news

கோட் படத்துல டெலிட்டான அந்த சீன்… இதைப் போயா எடுப்பீங்க… சும்மா மாஸா இருக்கே..!

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய கோட் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. இந்தப் படம் வசூலிலும் கல்லா கட்டி வருகிறது. இந்தப் படத்தைப் பற்றி தற்போது படத்தின் வசனகர்த்தா விஜி தனது அனுபவங்களைத் தெரிவித்துள்ளார். அள்ளித் தந்த வானம், வெள்ளித்திரை போன்ற படங்களின் இயக்குனர் இந்த படத்தின் வசனகர்த்தா விஜி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் டெலிட்டான சில விஷயங்களைப் பற்றி நிருபர் கேட்கையில் அவர் அந்த சீன்களைப் பற்றி சுவாரசியமாக எடுத்துச் சொன்னார். அதைக் கேட்டால் ரொம்ப ஜாலியா இருக்கே. இதைப் போயா எடுப்பாங்கன்னு தோணுச்சு. அவர் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

Advertising
Advertising

பார்ட்டி முடிஞ்சதும் ப்ரண்ட்ஸ்க கூட கார்ல வர்றாரு. அப்போ போலீஸ் மடக்குறாங்க. அந்த சீன் முதல்ல டெல்லியில தான் நடக்குறதா இருந்தது. அவர் இந்தியில ‘இறங்குடா, என்ன பேரு?’ன்னு கேட்பாரு. அப்போ விஜய் உள்ளே இருந்துக்கிட்டு சொல்வாரு. ‘இந்தி தெரியாது போடா’ன்னு. அப்போ பக்கத்துல இருக்குறவன் சொல்வான்.

‘டேய் இதெல்லாம் நம்ம ஊர்ல சொல்லணும்டா. இங்க சொல்லக்கூடாதுடா’ன்னு. சரின்னு எல்லாரும் கீழே இறங்கிடுவாங்க. அதுக்குப் பிறகு ‘உன் பேரு என்ன’ன்னு இந்தியில கேட்பாரு. அப்போ அப்படி இப்படி விஜய் சுத்திப் பார்த்துக்கிட்டு இருப்பாரு. மறுபடியும் ‘டேய் உன் பேரு என்ன? பேரைத் தான் கேட்டேன்’னு சொல்வாரு. படக்குன்னு கையை வச்சி வாயைப் பொத்திக்குவாரு.

அப்போ பிரபுதேவா வந்து சொல்வாரு. ‘இல்ல சார். அவரு குடிச்சா பேரை சொல்ல மாட்டாரு.’ ‘அப்படி என்ன பேரு..?’ ‘அவரு பேரு… காந்தி’ன்னு சொல்வாரு. அவரு அப்படியே கலங்கிடுவாரு. இப்படிச் சின்னதா ஜாலியா ஒரு சீன் இருந்தது. ஆனா புட்டேஜ்ல எல்லாமே போயிடுச்சு. வீட்டுலயும் நிறைய சீன் பண்ணியிருந்தோம். அதுவும் அப்படியே தான் போயிடுச்சு.

viji

‘என் பர்த்டேக்கு நீ குடிச்சே. அதுவே தப்பு. மன்னிச்சிடுறேன். சரி என்னத்துக்கு இப்போ தடுமாறிக்கிட்டு வர்ற?’ன்னு சினேகா கேட்பாங்க. அப்போ ‘சத்தியமா சொல்றேன். அதே அளவுக்குத் தான் குடிச்சேன். சரக்கு சரியில்ல’ன்னு சொல்வாரு விஜய். ‘அப்போ டிபன் வைக்க மாட்டேன்’னு சொல்லிட்டுப் போயிடுவாங்க. ‘நீயே தோசையை ஊத்தி சாப்பிட்டுப் போ’ன்னு சொல்லிடுவாங்க.

அப்புறம் ’28 வயசுல இந்தக் காந்தி தனியா தான் இருந்தான். நீ தான் எனக்கு தோசை விட்டியா? நீதான் எனக்கு ஊட்டி விட்டியா? போடீ’ன்னு சொல்லிட்டு தோசையை ஊத்துவாரு. ஆனா அது அப்படியே இருக்கும். ‘பில்லி, சூன்யம் எதுவும் பண்ணிட்டாளா?’ன்னு முணுமுணுப்பாரு. அப்புறம் ‘டேய் அனு, என்னடி பண்ணுன? தோசை அப்படியே இருக்கு’ன்னு சொல்வாரு. அப்புறம் தான் தெரியும் அடுப்பே பற்ற வைக்கலன்னு. அவங்க வந்து அடுப்பைப் பற்ற வச்சிட்டு போவாங்க.

Also read: உன்ன பாத்தாலே ஜிவ்வுன்னு ஏறுது!.. பீச்சில் சைனிங் உடம்பை காட்டி இழுக்கும் ஷிவானி!…

அப்புறம் படுக்க வருவாரு. ‘பக்கத்துல படுக்கக்கூடாது. தலகாணியை எடுத்துட்டுப் போ’ன்னு சொல்லிடுவாங்க. அப்புறம் வெளியே வந்து ’28 வயசுல இந்தக் காந்தி தனியாத் தான் படுத்து இருந்தான். நீ தான் வந்தியா’ன்னு தலகாணியைக் காலுக்குக் கீழே போட்டுக்குவாரு. ‘என்ன இது தலைக்குப் போச்சு. அதான் தப்பாப் போயிடுச்சு’ன்னு காலுக்குக் கீழே வச்சிட்டுத் தூங்கிடுவாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Published by
sankaran v

Recent Posts

  • Cinema News
  • latest news

சாய்பல்லவி கூட SK நடிப்பதில் சிக்கல்… பிரபலம் சொல்லும் புதுத்தகவல்

சிவகார்த்திகேயனைப் பொருத்த…

42 minutes ago