ஏ.ஆர். ரஹ்மானை அரெஸ்ட் பண்ணுவாங்களா?.. எல்லாமே திட்டமிட்ட சதி.. ஒரே போடாக போட்ட பிரபலம்!..

பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்து மிகப்பெரிய ஸ்கேமை ஏ ஆர் ரகுமான் தரப்பு செய்துள்ளது கண்டிப்பாக போலீசார் தானாகவே முன்வந்து வழக்கு தொடர வேண்டுமென பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

பனையூரில் உள்ள ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் ஏ ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.

இதையும் படிங்க: விஜய் ரசிகர்கள் உருட்டுன உருட்டுக்கு சன் பிக்சர்ஸ் சமஸ்தானமே ஆடிப்போச்சே!.. தலைவர் 171 அப்டேட் பின்னணி!

சுமார் 46,000 பேர் அமரக்கூடிய வகையில் அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேலான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது என்கின்றார்.

அனிருத் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் இசைக் கச்சேரிகளை ரசிகர்களுக்கு எந்த ஒரு பாதகமும் இல்லாமல் நடத்தி வரும் நிலையில், கரணம் தப்பினால் மரணம் என பல ரசிகர்கள் தலை தப்பித்தது தம்புரான் புண்ணியம் என்பது போல அடித்து பிடித்துக்கொண்டு ஓடிய காட்சிகள் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது எனக்கு கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பிச்சை எடுக்கிறாரு ரஹ்மான்!.. சரியான ஃபிராடு.. டிக்கெட்டுகளை கிழித்து அசிங்கமா திட்டும் ரசிகர்கள்!..

ஏற்கனவே நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு மழை காரணமாக நிகழ்ச்சி ரத்தான நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு வாங்கிய டிக்கெட்டுகளை வைத்து இந்த நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் வரலாம் எனக் கூறப்பட்ட நிலையில், புதிதாக நிகழ்ச்சியை நடத்தியவர்கள் கூடுதல் டிக்கெட்டுகளை விற்று காசு பார்க்க நினைத்ததன் பேராசை விளைவு தான் பல இளம் பெண்கள் பாலியல் துன்புறத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர் என்றும் குழந்தைகளை காணாமல் பெற்றோர்கள் தேடி அலைந்தது.

பலருக்கு அடிபட்டு ரத்தக் காயங்களுடன் வீடு திரும்பினர் என்றும் இதற்கெல்லாம் சரியான விசாரணையை போலீஸார் நடத்தி உரியவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலைப்பேச்சு அந்தணன் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார்.

 

Related Articles

Next Story