More
Categories: Cinema News latest news

அட்லியை அப்படி அசிங்கப்படுத்தினாரா கமல்?.. அந்த பேக்ரவுண்ட் போட்டோ அங்கே இடம்பெறுவதற்கான பின்னணி என்ன?

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த மெளன ராகம் திரைப்படத்தின் சாயல் அப்படியே அட்லி இயக்குநராக அறிமுகமான ராஜா ராணி படத்தில் இடம்பெற்றிருக்கும்.

இயக்குநர் ஷங்கரின் சிஷ்யன் என்பதால், அந்த பிரம்மாண்ட மேக்கிங் டச் காரணமாக அந்த படத்தை மட்டுமின்றி தொடர்ந்து அவர் இயக்கிய அத்தனை படங்களையும் பல விமர்சனங்களையும் கடந்து ஹிட் கொடுத்து விட்டார்.

Advertising
Advertising

விஜயகாந்த் நடித்த சத்ரியன் மற்றும் ரஜினிகாந்தின் பாட்ஷா படங்களின் கலவையாகவே தெறி படம் உருவாகி இருக்கும். தளபதி விஜய்யை வைத்து அட்லி இயக்கிய அந்த படமும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது.

மீண்டும் அட்லி இயக்கத்திலேயே இணைந்து மெர்சல் படத்தில் நடித்தார் தளபதி விஜய். அந்த படம் அப்படியே கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் அட்டுக் காப்பி என்பது படத்தை பார்த்த அனைவருக்குமே தெரிந்து விட்டது.

இயக்குநர் அட்லியிடமே இதை பற்றிய கேள்விகள் முன் வைக்கப்பட்ட நிலையில், தான் பார்த்து வளர்ந்த படங்களின் இன்ஸ்பிரேஷன் தான் தனது படங்களில் இருக்கும் என ஓப்பனாகவே சொல்லி விட்டார்.

அட்லி மட்டுமல்ல லோகேஷ் கனகராஜ் இயக்கிய அத்தனை படங்களுமே கமல்ஹாசனின் படங்களின் பிரதிபலிப்பாகவே இதுவரை இருந்து வருகின்றன.

இவ்வளவு ஏன், கமல்ஹாசனின் நாயகன் படமே ஹாலிவுட் காட்ஃபாதர் படத்தின் தழுவல் தான். அவ்வை சண்முகி உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் ஹாலிவுட் வாசம் அப்படியே வீசும்.

இந்நிலையில், மெர்சல் படத்தை முடித்தவுடன் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லி, ஒரிஜினல் ஓனர் உலகநாயகனை சந்தித்து எந்தவொரு சிக்கலும் வராமல் பார்த்துக் கொள்ள முடிவெடுத்து சென்றனர்.

அப்போது அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூம வலைதளங்களில் டிரெண்டானது. ஆனால், அந்த புகைப்படத்துக்கு பின்னணியில் அபுர்வ சகோதரர்கள் படமும் இடம்பெற்றிருக்கும். அது ஏதோ விபத்தாக அங்கே இடம்பெறவில்லை.

இந்த படம் அபூர்வ சகோதரர்கள் படம் தான் என்பதை இயக்குநர் அட்லிக்கு சுட்டிக் காட்டவே கமல்ஹாசன் அங்கே வைத்து போட்டோ எடுத்து அட்லியை அசிங்கப்படுத்தினார் எனக் கூறப்பட்டது.

ஆனால், உண்மையில் உலகநாயகனிடம் உங்கள் படம் அபூர்வ சகோதரர்கள் படம் தான் எனக்கு மெர்சல் படம் எடுக்கவே இன்ஸ்பிரேஷனாக இருந்தது என்றும், அந்த படத்தின் போட்டோ ஏதாவது இருந்தால், பின்னணியில் வைத்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா? என அட்லியே கேட்க, உடனே சிரித்து விட்ட கமல்ஹாசன் தனது அசிஸ்டன்டிடம் சொல்லி அங்கே அந்த படத்தின் போஸ்டரை வைக்க சொன்னதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சக்தே இந்தியா படத்தை காப்பி அடித்து பிகில் படத்தை இயக்கிய அட்லி, அடுத்ததாக ஷாருக்கானின் ஜவான் படத்தை எந்த படத்தின் இன்ஸ்பிரேஷனை கொண்டு இயக்கி வருகிறார் என்பதை காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏற்கனவே அதுவும் விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் காப்பி தான் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Published by
Saranya M

Recent Posts