
Cinema News
ஒத்த போஸ்டர்ல மொத்த சோலியும் முடிச்சிட்டீங்களே!.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கதை இதுதானா!
Published on
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
அந்த படத்தில் நடித்த பாபி சினிமாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதே கிடைத்தது.
ரஜினிகாந்தை வைத்து பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் அதன் பின்னர் தனுசை வைத்து ஜகமே தந்திரம் படத்தைக் கொடுத்தார். ஆனால் அந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக மாறியது.
இதையும் படிங்க: மூஞ்சியே காட்டாமல் முன்னழகை மொத்தமாக காட்டிய நயன்தாரா!.. ஆனா இதுலயும் பிசினஸ் இருக்கா?..
இளம் இயக்குனராக கடகடவென முன்னேறி வந்த கார்த்திக் சுப்புராஜ் தனுஷின் ஜகமே தந்திரம் படத்திற்கு பிறகு ஆள் அட்ரஸ் இல்லாமல் காணாமல் போய்விட்டார். இந்நிலையில் மீண்டும் தனக்கு வெற்றி கொடுத்த ஜிகர்தண்டா படத்தை தூசி தட்ட ஆரம்பித்துள்ளார். ஜிகர்தண்டா 2 படத்தை இயக்கி வரும் கார்த்திக் சுப்புராஜ் வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி அந்த படத்தின் டீசர் வெளியாகும் என்கிற அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.
ஆனால் அந்த அறிவிப்பு போஸ்டரிலேயே ஒட்டுமொத்த கதையும் தெரிந்துவிட்டது என ரசிகர்கள் தற்போது கிண்டல் செய்து வருகின்றனர். ஜிகர்தண்டா படத்தில் சித்தார்த் இயக்குனராகவும் பாபி சிம்ஹா கேங்ஸ்டர் ஆகவும் நடித்திருந்தனர்.
இதையும் படிங்க: எல்லாம் ஓகே அது என்ன சார் டிராமா தாடி!.. விஜய் ஆண்டனியின் ரத்தம் ட்ரெய்லரில் ஒரு பீஸ் மிஸ்ஸிங்!..
இந்நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா இயக்குனராகவும் ராகவா லாரன்ஸ் கேங்ஸ்டர் ஆகவும் நடித்துள்ளது தெளிவாக தெரிகிறது. ஜிகர்தண்டா திரைப்படத்தை போலவே இந்தப் படத்திலும் எஸ்ஜே சூர்யா ராகவா லாரன்ஸை ஏமாற்ற போகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்த ஆண்டு தீபாவளிக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வரும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. நிலையில் படத்தின் டீசர் அறிவிப்பு போஸ்டரிலேயே ரசிகர்கள் என்ன மாதிரியான படத்தைப் பார்க்கப் போகின்றனர் என்பதை தில்லாக கார்த்திக் சுப்புராஜ் சொல்லியிருக்கும் நிலையில், படத்தின் திரைக்கதை மற்றும் மேக்கிங் தூள் கிளப்பும் என கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்கள் நம்பி வருகின்றனர்.
Actor vijay leo: விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் லியோ. ஏனெனில், ரசிகர்களை மிகவும் கவர்ந்த லோகேஷ் கனகராஜ்...
தமிழில் மெரினா திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். இத்திரைப்படத்தினை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கினார். இப்படம் இவருக்கு பெரிய அளவில்...
Shah Rukh Khan: தமிழ் சினிமா இயக்குனர்கள் எல்லாம் வரிசையாக பாலிவுட் பக்கம் சென்று கொண்டு இருக்கும் நிலையில், பாலிவுட்டில் இருந்து...
Leo Audio Launch: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தின் ரிலீஸ் நெருங்கி வருகிறது. இந்நிலையில் படத்திற்கு இன்னும் 30...
Top hero’s best movies: தமிழ் சினிமாவில் இன்று நாம் பார்க்கும் பல முன்னனி நடிகர்கள் ஆரம்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகளை கடந்து...