Cinema History
பழிக்குப் பழி வாங்கினாரா எம்ஜிஆர்? சந்திரபாபு ஏழையாகி இறக்கக் காரணம் என்ன?
‘நகைச்சுவை மன்னன்’ என்று அழைக்கப்பட்டவர் சந்திரபாபு. இவர் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திற்குள் அதிக திரைப்படங்களில் நடித்தார். வெறும் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த பாடகராகவும் இருந்தார். எம்ஜிஆர், சிவாஜி என இரு பெரும் ஜாம்பவான்கள் கோலோச்சிய காலகட்டத்தில் ஒரு நகைச்சுவை நடிகராக முன்னேறியவர். அவர்களுக்கு இணையான சம்பளமும் பெற்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திரப் போராட்டக் குடும்பத்தில் பிறந்தவர் சந்திரபாபு. இவர் சினிமா மீது இருந்த ஆசையால் சென்னைக்கு வந்தார். பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். 50 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் தமிழக ரசிகர்களால் கொண்டாடப்படும் கலைஞன்.
படுதோல்வி படம்
அந்தக் காலகட்டத்தில் சந்திரபாபுவுக்குப் போதை பழக்கமும் இருந்தது. அப்போது அவர் கதாநாயகனாக நடித்த படம் ‘தட்டுங்கள் திறக்கப்படும்’. இது படுதோல்வி அடைந்தது. கடன் சுமையில் தவித்தார். இவற்றில் இருந்து மீள வேண்டும் என்று நினைத்த அவர் எம்ஜிஆரை வைத்து ‘மாடிவீட்டு ஏழை’ என்ற படத்தைத் தயாரித்தார்.
கைவிட்டுப் போன கனவு இல்லம்
ஒரு கட்டத்தில் அந்தத் திரைப்படத்தை எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் சந்திரபாபு. கடனுக்காக அவரது வீட்டை கோர்ட் ஜப்தி செய்தது. கனவு இல்லம் கைவிட்டுப் போனதே என நிலைகுலைந்து போனார் சந்திரபாபு. வறுமையும், போதையும் அவரை மிகப்பெரிய ஏழையாக்கியது. 1974ல் அந்த மகா கலைஞர் மறைந்து போனார்.
Also read: செலவுக்கு காசு இல்ல!. 2 படங்களை தட்டி தூக்கி கோடிகளை குவிக்கும் ஜெயம் ரவி!…
பிளாஷ்பேக்
எம்ஜிஆர் படங்களில் சந்திரபாபு நடித்தால் அவருக்கும் கைதட்டல், விசில் பறந்ததாம். அதனால் இனி என் படங்களில் சந்திரபாபு வேண்டாம் என்று முடிவெடுத்தாராம். சந்திரபாபுவைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் கலகலன்னு இருக்குமாம். இதுவும் எம்ஜிஆருக்குப் பிடிக்கவில்லையாம். ஒரு தடவை பத்திரிகை ஒன்றில் எம்ஜிஆருடைய நடிப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்னு சந்திரபாபுவைக் கேட்டார்களாம். அப்போது அவர் ‘எம்ஜிஆர் இப்போது ஆஸ்பத்திரி கட்டிக்கிட்டு இருக்குறதா கேள்விப்பட்டேன்.
மிகச்சிறந்த நடிகர்
நடிக்கிறதுக்குப் பதிலாக அவர் கம்பவுண்டர் வேலைக்குப் போகலாம்’னு ஜாலியாகச் சொன்னாராம். இதுவும் எம்ஜிஆரின் காதுகளுக்கு எட்டியுள்ளது. இன்னொரு பத்திரிகையில ‘தமிழ்ல இருக்குற மிகச்சிறந்த நடிகர் யாரு’ன்னு கேட்குறாங்க. அதுக்கு நானும், சிவாஜியும்னு சொல்லி விடுகிறார். இதுல தன்னோட பேரைச் சொல்லவில்லையே என்ற கோபம் எம்ஜிஆருக்கும் இருந்ததாம்.
எம்ஜிஆர் கண்டிஷன்கள்
அந்த நேரம் சந்திரபாபு எம்ஜிஆரை வைத்துப் படம் எடுக்க ஆசைப்பட்டாராம். அதுதான் மாடிவீட்டு ஏழை. அப்போது கால்ஷீட் விஷயம் பற்றிப் பேசுனாராம். அப்போது பத்திரிகைகளில் கொடுத்த பேட்டி பற்றிக் கேட்டாராம். அதற்கு இனிமேல் அப்படி பேசலன்னும் சொன்னாராம் சந்திரபாபு. எம்ஜிஆர் அப்போது சந்திரபாபுவிடம் பல கண்டிஷன்கள் போட்டுள்ளார். அதிக சம்பளம், கால்ஷீட்னு சொல்லிட்டு எனக்காக ரொம்ப நாள் காத்திருக்கணும்னும் சொன்னாராம்.
எம்ஜிஆருக்கு சம்பளத்துக்கான அட்வான்ஸ் கொடுக்க சாவித்திரியிடம் கடன்வாங்கி 25 ஆயிரத்தைக் கொடுக்குறார். இப்படி அப்படின்னு கஷ்டப்பட்டு சந்திரபாபு எடுக்க நினைத்தார். செட் போட இணைதயாரிப்பாளர்களிடம் பணமில்லை. தனது வீட்டை அடமானம் வைத்து படம் எடுக்கிறார். ஆனால் பட பூஜையில் எம்ஜிஆர் கலந்து கொள்ளவில்லை. 3 நாள்கள் சூட்டிங் போகுது.
போதைக்கு அடிமையான சந்திரபாபு
ஆனால் எம்ஜிஆருடைய கால்ஷீட் கிடைக்கவே இல்லை. மீதமுள்ள நடிகர்களை வைத்து படம் எடுத்து விடுகிறார். நாலரை லட்சம் வரை செலவழித்து விடுகிறார். என்னோட கால்ஷீட்டை எல்லாம் அண்ணன் சக்கரபாணி தான் பார்க்கிறாரு. அவரை போய் பாருங்கன்னு எம்ஜிஆர் சொல்றாரு. சக்கரபாணியும் முறையான பதில் சொல்லாமல் அலைக்கழிக்கிறார்.
Also read: பாக்கியராஜிடம் எம்ஜிஆர் சொன்ன கறாரான விஷயம்… அப்படி வந்தது தான் அந்த சூப்பர்ஹிட் படம்!
இதனால் கருத்துவேறுபாடு உண்டாகிறது. கடைசியில பத்திரிகை விவகாரம் வெளிவருகிறது. கைகலப்பு வரை சென்றதாம். அதனால் சினிமா உலகில் சந்திரபாபுவின் பெயரும் கெட்டுப்போனது. கடைசியில் எம்ஜிஆர் தரப்பில் இருந்து பெண் விவகாரம் இருந்ததால் இந்தப் படம் கைவிடப்படுகிறது என தகவல் வந்ததாம். சந்திரபாபுவுக்கு பொருள் நஷ்டம் மட்டுமின்றி பேரும் கெட்டுவிடுகிறது. இதனால் தான் போதைக்கு அடிமையானதாக சொல்லப்படுகிறது.