எம்.ஜி.ஆருக்கு பயந்து பாடலின் வரிகளை மாற்ற சொன்னாரா ரஜினி?.. நடந்தது என்ன?..
படையப்பா படத்தில் ஓகோஹோ கிக்கு ஏறுதே பாட்டிற்கான சூழலை கே.எஸ்.ரவிகுமார் சொல்லவில்லையாம். இந்தப் பாடலில் கவிஞர் வைரமுத்து உனக்கு வாழ்க்கையில எல்லா உரிமைகளும் கிடையாது. ஆனால் ஒரு சில உரிமைகள் வாழறதுக்கு இருக்கு என ஒரு சித்தரோட மனநிலையில் இருந்து இந்தப் பாடலை வைரமுத்து ஆரம்பிச்சிருப்பாரு. இதுல இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் விசில் சத்தத்தை அழகா வாசிச்சிருப்பார்.
அதே போல சாக்ஸபோனும் அழகா வாசிச்சிருப்பார். மனோ பாடலை அழகாகப் பாடியிருப்பார். ஓஹோகோ கிக்கு ஏறுதே... ஓஹோகோ வெட்கம் போனதே என வரிகளைப் பல்லவியில் போட்டு இருப்பார். அது மட்டுமல்லாம, கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ள, தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளன்னு அழகாகப் பாடியிருப்பார்.
தங்கத்தைப் பூட்டி வைத்தாய், வைரத்தைப் பூட்டி வைத்தாய், உயிரைப் பூட்ட ஏது பூட்டு? குழந்தை ஞானி இங்கு இருவர் தவிர வந்து சுகமாய் இருப்பவர் யார் காட்டு? குழந்தைக்கு கள்ளமில்லாத மனசு, அது போல ஞானிக்கும் கள்ளம் குறைந்த மனசு. இரண்டு பேரும் சுகமா இருப்பாங்க.
ஜீவன் இருக்கும் மட்டும், வாழ்க்கை நமக்கு மட்டும், இது தான் ஞானசித்தன் பாட்டு. இந்த பூமி சமம் நமக்கு. நம் தெருவுக்குள் சாதிச்சண்டை, மதச்சண்டை வம்பெதுக்கு? என முதல்; சரணத்தை முடித்திருப்பார்.
இந்தப் பாடலில் முதலில் இதுதான் ரஜினி சித்தர் பாட்டுன்னு வைரமுத்து எழுதினாராம். அதைப் பார்த்ததும் ரஜினி இது முடியவே முடியாது என்று மறுத்து என்னை எல்லாம் சித்தர் மனநிலைக்குக் கொண்டு போகாதீங்கன்னு மாற்ற வைத்தாராம். அதன்பிறகு தான் ஞானசித்தர் பாட்டுன்னு வந்ததாம்.
அடுத்ததாக இதுல தங்க பஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ள என்று போட்டு இருப்பார் வைரமுத்து. அதைப் பார்;த்ததும் ரஜினி இது எம்ஜிஆரைக் குறிப்பது போல இருக்கு. இதையும் மாற்றிடுங்கன்னு சொல்ல, வைரமுத்து இல்லை தங்கபஸ்பம் எம்ஜிஆர் சாப்பிட்டதா தான் சொல்வாங்க.
இதையும் படிங்க... கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி!.. நடந்தது இதுதான்..!
ஆனா அவரு ஒரு தடவையும் அப்படி சொல்லல. ஆனாலும் இது உண்மையான வரிகள் தான்னு அதே வரியை மாற்றாமல் போட்டார்களாம். இந்த வரியைப் போட்டதும் தான் அது மனித வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்த்தியதாம். மேற்கண்ட தகவல்களை பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.