ஜென்டில்மேனயும் பார்த்து வியந்திருக்கேன்...தேவர் மகனயும் பார்த்து மிரண்டுருக்கேன்...இயக்குனர் முத்தையா
அடுத்த வாரம் கிராமிய மணம் கமழ வழக்கமான ஆர்ப்பாட்டத்துடன் பரபரவென ரலீசுக்குத் தயாராகி வருகிறது கார்த்தியின் விருமன் படம். யதார்த்தம் மாறாமல் அந்த மண்ணுக்கே உரிய மண்வாசனையுடன் வீரமும் விவேகமும் கலந்து குடும்பப்பாங்கான படங்களைக் கொடுப்பதில் வல்லவர் தான் இயக்குனர் முத்தையா. இதைத் தொடர்ந்து இயக்குனர் முத்தையாவின் சுவாரசியமான பகிர்வுகளை இங்கு பார்ப்போம்.
கூட்டுக்குடும்பத்தில் முக்கியமான ஒரு ஆள் தவறு செய்தால் அதை சுற்றி உள்ள உறவுகள் கேட்கும். அப்படி கேட்கும்போது அந்த தவறுகள் தொடராமல் இருக்கும். இதுதான் விருமன் படத்தின் மையக்கரு.
பருத்தி வீரன் படத்தில் ரொம்ப ராவா பண்ணியிருந்தார். கொம்பன் மெரிட்டா பண்ணியிருந்தார். கடைக்குட்டி சங்கம் பக்காவா பேமிலிக்குள்ள போயிருந்தாரு. இந்தப்படத்தில ராவாவும், பேமிலிக்குள்ளயும் போயிருந்தாரு.
தேனி மாவட்டத்தின் பிரதான குலசாமி விருமன். இது தான் முதல் சாமி. விருமன் என்றால் பிரம்மன். படைச்சவன். விருமனும், மாயனும், சிவனான்டியும் பிரதானமான சாமி. இதில் முதல் சாமி விருமன்.
விருமனால் என்ன சொல்லப்போறோம்கற ஒரு கேரக்டருக்கு அந்த அளவுக்கு கச்சிதமா பொருந்தியவர் தான் கார்த்தி. அவரோட பெரிய அடையாளம் பருத்தி வீரன். அதனால வேட்டி கட்டினாலே அவருக்கு ஒரு கிராமத்து அடையாளம் வந்து விடும். அந்தளவுக்கு கார்த்திக்கு வீரியமான படம் இது.
கார்த்தி சார் என் மேல மரியாதையை விட நம்பிக்கை வச்சிருக்காரு. அவர் அடிக்கடி என்கிட்ட சொல்வாரு. ஒழுக்கம், எந்நேரமும் ஓடிக்கிட்டே இருப்பீங்க. அதுல ஒரு எமோஷனல் பண்ணனும். இந்த மூணும் நானும் தான்னு அடிக்கடி சொல்வாரு.
கேரக்டர்ல எந்த இடத்திலும் தம்மடிக்கிற மாதிரியான கேரக்டர வைக்க மாட்டேன். அதிதி சங்கர் நல்லா பண்ணிருக்காங்க. தேன்மொழி என்பது அந்தக் கதாபாத்திரத்தோட பேரு. தண்ணிக் கேன் போடுற பொண்ணு.
எப்படி மண்சார்ந்து இருக்கணுமோ அப்படி இருப்பாங்க. அவங்க உண்டு. அவங்க வேலை உண்டுங்கற கதாபாத்திரத்தை சிறப்பா பண்ணிருப்பாங்க. அவங்களோட லுக்கு விருமனுக்கு பிளஸ்ஸா இருக்கும்.
மெருன் கலர், பிளாக், மஞ்சள் இந்த மூணு கலர் இருக்குற மாதிரி டிரஸ்ல நான் எப்பவுமே ஹீரோயினுக்கு டெஸ்ட் பண்ணிப் பார்ப்பேன். ரெண்டே லுக் தந்தாங்க. ஒண்ணு பிரியாமணி 80 பர்சன்டேஜ் அப்படியே இருந்தது. 20 பர்சன்டேஜ் பூ பார்வதி லுக் இருந்தது. ஓகே. ரைட். அதிதி சங்கர் செலக்ட். பர்பார்மன்ஸ் அழகா பண்ணினாங்க.
பாரதிராஜா சார், மகேந்திரன் சாரை வச்சித்தான் சினிமாவுக்கு வந்தேன். அது தான் உண்மை. பாலசந்தர் சாரோட எல்லா படமும் பிடிக்கும். ரொம்ப பிடிக்கிறது தண்ணீர் தண்ணீர் படம். இந்த 3 ஜாம்பவான்களைப் பார்த்துத் தான் சினிமாவுக்கு வர ஆசைப்பட்டு ஒரு இயக்குனரானேன். அப்போ மூணுபேருக்குமே பிரதானமானவரா இருந்தது நம்ம ராஜா சார். அவர் பாட்டைக் கேட்டுத்தான் டீக்கடையில டீயேக் குடிப்போம்.
சினிமாவுக்குள்ள 96க்கு வந்தபிறகு அப்போ தான் யுவன் வந்தாரு. எங்க பார்த்தாலும் அவரோட பிஜிஎம் தான். அப்போ யுவன் சார் கூட ஒர்க் பண்ணனும்னு ஆசை வரும். இளையராஜா சார் கூட ஒர்க் பண்ணனும். அதுல மாற்றுக்கருத்தே இல்ல. கண்டிப்பா பண்ணப்போறோம்.
மொத்தம் 5 சாங். எல்லாமே டக்கு டக்கு டக்குன்னு ஒரு ஒரு டியுன் தான். சூர்யா சாருக்கு தேசிய விருது கிடைச்சப்ப அப்பாவுக்கு நல்லாசிரியர் விருது கெடைச்ச மாதிரியான பீலிங் இருந்துச்சு. சூர்யா சார், ஆர்யா சார், கமல் சாரோட பண்ணனும்னு ஒரு ஐடியா இருக்கு. கூடிய சீக்கிரத்திலே இது நடக்கும். இதுல ஆர்யா சார் கன்பார்ம்.
ஒரு சினிமா ஹிட்டாகும்போது அடுத்தப்படத்தை இதைவிட எப்படி ஹிட்டாக் கொடுக்கலாம்னு யோசிக்கறதுக்கு ஒரு உந்துதலா இருக்கும். அதனால சினிமா தான ஜெயிச்சிருக்குன்னு தான் பார்க்கணும். அதை ஸ்டேட் வைஸா பிரிச்சிப் பார்க்கக்கூடாதுங்கற ஒரு விஷயத்தை கமல் சார் தான் கேஜிஎப் போட வெற்றியைப் பற்றிப் பேசும்போது சொன்னாரு.
கொம்பன் படம் பண்ணம்போது கமல் சார் தான் எனக்கு ஹீரோ. கார்த்தி சாரோட மாமனார் கமல் சார் தான்னு வச்சிருந்தேன். தேவர் மகன் மெச்சூர்டான ஒரு தேவர் மகன். சக்திவேலு. அவருக்கு ஒரு பொம்பளப்பிள்ள பிறந்து பருத்தி வீரன் மருமகனா இருந்தா என்னத்துக்கு ஆகும்?
அப்போ வந்து எப்படி கமல்சார்க்கிட்ட நாம கதை சொல்ல முடியுமான்னு இருந்தப்ப தான் ராஜ்கிரண் சாரை அந்தக் கேரக்டர்ல நடிக்க வச்சேன்.
நான் ஜென்டில்மேனயும் பார்த்து வியந்திருக்கேன். முள்ளும் மலரயும் பார்த்து அசந்திருக்கேன். தேவர் மகனயும் பார்த்து மிரண்டுருக்கேன். முரட்டுக்காளையும் பார்த்துக் கைதட்டியிருக்கேன். சகலகலாவல்லவனயும் பார்த்துருக்கேன். மக்களுக்கு வந்து சினிமாங்கறது ரசனையான விஷயம். அதைப் போரடிக்க விடக்கூடாது. அதே போல சொல்லும்போதும் நல்ல விஷயங்களா சொல்லிடணும்.