என்னது 1000 படங்களை இயக்கினாரா? தாய்மார்களே தூக்கிக் கொண்டாடிய வில்லன் இவர்தாங்க…

Published on: June 1, 2024
Chandrasekar
---Advertisement---

நடிகர் சந்திரசேகர் பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் தனது திரையுலக அனுபவங்களை இவ்வாறு தெரிவித்துள்ளார். என்ன சொல்கிறார்னு பார்ப்போமா…

ராமநாராயணன் ரொம்ப சிக்கனமானவர். ஒரே நாளில் 15 சீன் எடுப்பார். சிவப்பு மல்லி படம் 20 நாளில் எடுத்து முடித்தோம். 5 சாங், 4 பைட் எல்லாம் எடுத்து முடிச்சோம். அவரோட படங்களில் நிறைய நான் நடிச்சிருக்கேன்.

இதையும் படிங்க… அதிக முறை தேசிய விருது வாங்கிய நடிகர்கள்!.. சுள்ளானா இருந்தும் சுளுக்கெடுத்த தனுஷ்!…

நான் விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, மோகன், எஸ்.வி.சேகர்னு எல்லாரும் அவரோட படங்கள்ல நடிப்போம். காரணம் எங்களை அவ்ளோ சந்தோஷமா வச்சிக்குவாரு. எனக்கு அவருக்கும் பெரிய நட்பு. சிறந்த நண்பர். அவருடைய பல படங்களில் நான் நடிச்சிருக்கேன்.

கிட்டத்தட்ட 1000 படங்கள் வரை இயக்கி இருக்கிறார். அவர் முதலில் இயக்கிய ‘சுமை’ படத்தின் ஹீரோ நான் தான். ‘இந்தப் படத்துக்கு நீங்க தான் ஹீரோ’ன்னு சொன்னாரு. ‘ஏன் சார் ரிஸ்க் எடுக்கறீங்க?’ன்னு கேட்டேன். ‘நீங்க தான் ஹீரோ.. நடிங்க’ன்னு சொல்லிட்டாரு.

ஒரு குடும்பத்துக்காக ரொம்ப தியாகம் பண்ற கேரக்டர். படத்துல நான் செத்துப் போயிடுவேன். அமைஞ்சிக்கரை லட்சுமில நானும், ராமநாதனும் இந்தப் படம் பார்க்கப் போறோம். தியேட்டர்ல தாய்மார்கள் எல்லாம் ஒரே அழுகை.

படம் முடிஞ்சி வெளியே வரும்போது நானும், ராமநாதனும் வெளியே வந்து நிக்கிறோம். எங்களைப் பார்த்ததும் அப்படியே கட்டிப்பிடிச்சி தூக்கி ‘வந்துட்டீய உயிரோட… வந்துட்டீய உயிரோட…’ன்னு கொண்டாடிட்டாங்க.

அந்தக் குடும்பத்துக்காக அவ்வளவு தியாகம் பண்ணின ஒருத்தன்னு அப்படி ரீச்சாகி பெரிசா ஒர்க் அவுட்டானது. அப்படித்தான் கரகாட்டக்காரன்ல மாரியம்மா பாட்டுக்கு எல்லா தியேட்டர்கள்லயும் எல்லா தாய்மார்களும் சாமியாட ஆரம்பிச்சிட்டாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க… விஜய், அஜித் படம் பண்ணுறதெல்லாம் விஷயமா? அப்புறம் எதுக்கு கதை சொல்ல போனீரு… கலாய்க்கும் ரசிகர்கள்…

சந்திரசேகர் கரகாட்டக்காரன், புள்ளக்குட்டிக்காரன், மாஞ்சாவேலு போன்ற படங்களில் வில்லனாக வந்து செம மாஸ் காட்டியிருப்பார். இந்தப் பேட்டியில் சந்திரசேகர் ராமநாதன் கிட்டத்தட்ட 1000 படங்கள் வரை இயக்கியுள்ளார்னு சொல்வார். அது தான் ரொம்ப வேடிக்கை. அப்படி எல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. அவர் 36 ஆண்டுகளில் 125 படங்களை இயக்கியது உலகசாதனையாகப் பார்க்கப்படுகிறது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.