பக்திக்கு வந்த சோதனையை வென்று சாதித்துக் காட்டிய இயக்குனர்..! தமிழ்சினிமாவைத் திருப்பிப் போட்ட படம்...இதுதான்...!

by sankaran v |   ( Updated:2023-02-28 18:11:05  )
பக்திக்கு வந்த சோதனையை வென்று சாதித்துக் காட்டிய இயக்குனர்..! தமிழ்சினிமாவைத் திருப்பிப் போட்ட படம்...இதுதான்...!
X

Sampoorna Ramayanam

தமிழ்மொழி இயல் இசை நாடகம் எனும் 3 பிரிவுகளாக இருந்து இறைவனை துதித்த மொழி. முத்தமிழும் சனாதான தர்மத்தையே போற்றி வளர்த்தன‌.

நாடகத் தமிழ் என்பது இறைவனின் காட்சிகளை நடித்துக் காட்டி மக்களுக்கு பக்தி வளர்க்கும் நல்ல வழியாக அன்று இருந்தது. அன்று நாடகங்களெல்லாம் ராமன் கதை, கண்ணன் கதை, முருகன் வள்ளி கதை என பக்தி இலக்கியத்தின் நாடக வடிவங்களாய் இருந்தன.

அது பின்னாளில் விஞ்ஞான காலத்தில் ஊமைபடங்களாய் வந்த காலத்திலும் பின் பேசும் படங்களாய் வந்த காலத்திலும் அவை இந்து புராண பக்தி படங்களாய் இருந்தன‌. பின்னர் மெல்ல மெல்ல இந்து எதிர்ப்பு கோஷ்டிகளிடம் மக்கள் அறியாமலே சினிமாத்துறை சிக்கியது, புரட்சி புண்ணாக்குகள் எனும் பெயரில் விஷம் கலக்கபட்டது.

1950களில் குபீரென சமூக போராளி படங்கள் வந்தன, இவர்கள் காமெடியான படத்தை சீரியசாக கொடுத்தார்கள். பராசக்தி படம் அப்படியானது, பர்மாவில் தமிழன் பிச்சைக்காரனோ தமிழ்நாட்டில் தமிழன் பராரியா, வறுமையா? அய்யகோ என அழுத படம் அது.

ஆனால், பர்மாவைக் ஆண்டதும் ஆங்கிலேயன், இந்தியாவை ஆண்டதும் ஆங்கிலேயன் என எது மூலமோ அதை சொல்லவே மாட்டார்கள், இதுதான் தமிழக சமூக படங்கள்.

A.P.Nagarajan

இது போக, அரசர் கதைகள் வந்தன. ஆனால் தமிழக அரசர்கள் ரோமாபுரி கிரேக்க மன்னர் போல் குட்டை பாவாடை அணிவார்கள், திறுநீறு பூசமாட்டார்கள். ஐரோப்பிய கெட்டப்பில் தமிழ் பேசி அசத்துவார்கள். ஆனால் தமிழக மன்னர்களின் அடையாளமான திருநீறும் கொண்டையும் ருத்திராட்சமும் வராது.

பீம்சிங் போன்ற மிகசிறந்த இயக்குநர்களே தமிழக மன்னர்களின் அடையாளமான திருநீறும் கொண்டையும் ருத்திராட்சத்துடன் இருப்பது போல் படத்தில் காட்டினர் என்பதே சோகம். ஆகசிறந்த அவரும் புத்தன், இந்து எதிர்ப்பு என குறியீடுகளை காட்டி தன்னை சமூக போராளியாக காட்டி கொண்டதெல்லாம் சோகம்.

இப்படி, தமிழ்சினிமா இந்துமத அடையாளத்தையும் இந்துமத சிறப்புக்களையும் மெல்ல மெல்ல மறந்த பொழுதுதான் ஒரு பழைய இந்து ஆத்மா ஒன்று தமிழ் உலகத்துக்கு இயக்குநராய் வந்திருந்தது, அதுதான் காலத்தால் அழியா இந்து தமிழ்படங்களை நமக்கு தந்தது.

மறக்கமுடியா அந்த இயக்குநர், பாடல்கள் வழி இறைவனை பாடிய தமிழரில் கோவில் வழி இறைவனை கண்ட தமிழரில் சினிமா வழி இறைவனை காண வைத்த பெருமகன். ஏ.பி நாகராஜன். எக்காலமும் தமிழக இந்துக்கள் மறக்கமுடியா பெரும் பக்தன். அவர் கொங்குமண்டலம் சங்ககிரி பக்கம் அக்கமா பேட்டை பிறந்த‌ ஏழை குடும்பத்தில் பிறந்தார்.

தந்தை பெயர் பரமசிவ கவுண்டர். அவருக்கு 4ம் மகனாக பிறந்தவர் குப்புசாமி. பரமசிவ கவுண்டர் சிறுவயதிலே இறந்துவிட அந்த குடும்பத்தின் வறுமை இவரை நாடக கம்பெனி பக்கம் தள்ளியது.

அன்று ஏழை குடும்பங்கள், நிலமோ, தொழிலோ இல்லா குடும்பங்களின் குழந்தைகள் நாடக கம்பெனிகளுக்கு வருவது வழக்கம். சிவாஜி முதல் எம்ஜிஆர் வரை அப்படித்தான் வந்தார்கள்.

இந்த குப்புசாமி டி.கே.எஸ் சகோதரர்களின் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார். மெல்ல, மெல்ல நாடக கலையின் நுணுக்கமெல்லாம் கற்றார். அங்கேதான் நடிப்பு முதல் பல விஷயங்களைச் செய்து அனுபவம் பெற்றார். ஒருவகையில், பிற்கால புராண படங்களுக்கான விதை அங்குதான் இவரிடம் ஊன்றப்பட்டது.

அங்கு நிறைய குப்புசாமி இருந்ததால், இவர் பெயர் நாகராஜன் என்றானது. வாலிப வயதில் அக்கமாபேட்டை பரமசிவன் நாகராஜன் எனும் பெயர் ஏ.பி நாகராஜன் ஆனது.

காலமெல்லாம் திருநீறு பூசி இந்து பெருமை பேசி, முழு அடியாராக வலம் வந்தார். நாடகம் சினிமாவான பொழுது மெல்ல சினிமாவுக்கு வந்தார்.

1953ல் நால்வர் படம் மூலம் தமிழ்சினிமாவுக்கு வந்தார், மார்டன் தியேட்டர்ஸ் கம்பெனி அவரை அரவணைத்தது, முதலில் அந்த படத்துக்குத்தான் வசனமெல்லாம் எழுதிக் கொண்டிருந்தார். அவர்கள் நல்லதங்காள் போன்ற படங்களைத் தயாரித்த காலம்.

Makkalai Petra Maharasi

அப்போதுதான் எஸ்.எஸ் வாசனின் ஒளவையார் படம் பிரமாண்டமாக இந்துமக்களால் கொண்டாடப்பட்டது.
வாசன் மிகப்பெரிய இந்து பணியினை அதில் செய்திருந்தார். சங்க கால அவ்வையாரை மக்கள் முன் நிறுத்தியிருந்தார்.

அதிலிருந்து நாகராஜனுக்கு புராண கதை படங்கள் மனதில் நிழலாடின. ஆனால், காலம் கனியவில்லை.
தொடர்ந்து, டவுண்பஸ் போன்ற படங்களுக்கு எழுதினார். மக்களை பெற்ற மகராசி படம் அவருக்கு நல்ல பெயரைக் கொடுத்தது.

தமிழ் சினிமாவில் கொங்குதமிழை அவர்தான் முதலில் கொண்டு வந்தார். சிவாஜி கணேசனின் கொங்குதமிழ்தான் அந்த அழகு தமிழை அகிலமெங்கும் முதலில் எடுத்து சென்றது. அதற்கு காரணம் நாகராஜன்.

இருவரின் நட்பு அப்படி தொடங்கித்தான் பின்னாளில் பெரும் படங்களை கொடுத்தது. 1958ல் அவரின் இந்துபணி தொடங்கியது. மார்டர்ன் தியேட்டர்ஸின் பிரமாண்ட தயாரிப்பில் சம்பூர்ண ராமாயணம் படம் வந்தது. பெரும் புகழைத் தேடித் தந்தது.

ஆந்திராவின் தேவுடா என கொண்டாடப்பட்ட என்.டி ராமராவ் அதில்தான் உருவானார். அப்போது சமூக படம், மன்னர் படம் என மாறியிருந்த தமிழ் சினிமாவினை அப்படம் திருப்பிப்போட்டது. இந்திய அளவில் பெரும் வெற்றிபெற்றது படம். ராமபிரானின் ஆசியில் அடுத்தடுத்து இந்து படங்களைக் கொடுத்தார், ஏ.பி.நாகராஜன்.

Next Story