தோல்விப்படம் கொடுத்தும் வாய்ப்பு கொடுத்த AK! ஆதிக் அஜீத்தின் ரசிகர் ஆனது எப்படி?

by sankaran v |   ( Updated:2025-04-09 01:35:34  )
goodbadugly, aathik
X

goodbadugly, aathik

Goodbad ugly: குட்பேட் அக்லி நாளை ரிலீஸ். இதையொட்டி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தைப் பற்றி பல்வேறு மீடியாக்களில் தகவல் தந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

ஒரே மாதிரியான படங்கள் பண்ணினா போர் அடிச்சிடும். அஜீத் சாருக்கு நேர் கொண்ட பார்வை அப்படித்தான் வந்தது. விடாமுயற்சி இந்தக் கால ஜெனரேஷனுக்குத் தேவையான படம். எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாது என்கிறார் குட்பேட் அக்லி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

நாங்க பிளான் பண்ணதை விட சீக்கிரம் முடிச்சிட்டோம். அதுக்குக் காரணம் அஜீத் சார் தான். அந்தளவு அவர் எனர்ஜியிலேயே இருப்பாரு. எங்க அம்மா சாருக்கு பெரிய ஃபேன். அவங்க படம் போட்டா எல்லா வேலையையும் முடிச்சிட்டு உட்கார்ந்து பார்ப்பாங்க. நானும் அப்படியே பார்த்து பார்த்து சாருக்கு ஃபேனா ஆகிட்டேன் என்கிறார் ஆதிக்.

நேர்கொண்ட பார்வை படத்துல ஆதிக் நடிச்சாரு. அப்பவே அஜீத் அவரிடம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணுவோம்னு சொன்னாராம். அப்போ ஆதிக் ஒரு கதை சொல்ல அதை விஷாலிடம் சொல்லு. அவருதான் மேட்சா இருக்கும் என்று அஜீத் சொல்லி இருக்கிறார். அப்படி உருவானதுதான் மார்க் அன்டனி. படம் பட்டையைக் கிளப்பிடுச்சு. அந்த வகையில் அஜீத் எப்படிப்பட்டவர்னு ஆதிக் சொன்னது இதுதான்.

goodbad ugly movieஆதிக்கின் இயக்கத்தில் வந்த முதல் படம் திரிஷா இல்லன்னா நயன்தாரா. அது சூப்பர்ஹிட். ஆனா ரெண்டாவது படம் AAA. அட்டர்பிளாப். அப்போ யாரு எனக்கு வாய்ப்பு கொடுப்பாங்க? ஆனா சாரு அப்பவே நாம ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்றோம்னு சொன்னாரு. சாருக்கு ஓடுற குதிரை முக்கியமல்ல. ஓட முடியாத குதிரையையும் ஓட வைப்பாரு. அதுதான் அஜீத் என்கிறார் ஆதிக்.

விடிந்தால் அஜீத் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். இன்று அமெரிக்காவில் ரிலீஸ் ஆகி பாசிடிவான விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன. குட்பேட் அக்லியில் அஜீத்தின் தெறிக்கவிடும் மாஸான சீன்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Next Story