அஜீத்துக்கு கதை சொல்ல பயந்து நடுங்கிய ஆதிக்…! ஆனா அப்படியும் சொல்றாரே!

by sankaran v |   ( Updated:2025-04-07 20:56:10  )
ajith, aathik
X

ajith, aathik

Good bad ugly: அஜீத்தின் கம்பீரமான கலக்கலான அட்டகாசமான நடிப்பில் குட்பேட் அக்லி வரும் 10ம் தேதி திரைக்கு வருகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சில தகவல்களைத் தந்துள்ளார். பார்க்கலாமா…

மார்க் அண்டனி எனக்காக ஓட்டுன வண்டி. அதை நல்லபடியா ஓட்டி டெலிவர் பண்ணினேன். குட்பேட் அக்லி நம்ம அப்பா, அண்ணன் கூட வர்றாரு. இந்த வண்டியில. கரெக்டா ஓட்டணும்கற பயம் முதல் நாள்ல இருந்து இருந்துக்கிட்டே இருக்கு. நான் எப்பவுமே பர்ஸ்ட் மிடில், இன்டர்வல், செகண்ட் ஆப், கிளைமாக்ஸ் பிக்ஸ் பண்ணிடுவேன். அப்புறம் எழுத ஆரம்பிச்சிடுவேன்.

ரைட்டிங் பிராசஸ் ரொம்ப சந்தோஷமா இருந்தது. அஜீத் சாருக்குக் கதை சொல்லும்போது பயங்கரமா பயம் இருந்தது. சாரு ஓகே பண்ணுவாராங்கற பயம் இருந்தது. ஓகே பண்ணுனதுக்கு அப்புறம் நல்லா எடுக்கணும்கற பயம் இருந்தது. பயம்தான் அதிகமா இருந்தது. அப்புறம் ரெஸ்பான்சிபிலிட்டி. ரெண்டும் இருந்ததால ரொம்ப என்ஜாய் பண்ணி எடுக்க முடிந்தது.

ரொம்ப கரெக்டா போகணும்கறதுதான் எண்ணமா இருந்தது. ஆனா ஸ்பாட்ல ஜாலியா இருந்தோம். சார் பயங்கர ஹேப்பியா டீமே என்ஜாயா இருந்தது என்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். திரிஷாவுக்கு அஜீத் தான் கதையே சொன்னாராம். அதே மாதிரி நான் ரொம்ப சந்தோஷமா, ஜாலியா, ஃபீஸ்புல்லா வேலை செஞ்ச படம் குட்பேட் அக்லி என்கிறார் இயக்குனர் ஆதிக்.

good bad ugly கதை சொல்லி முடிச்சதும் அஜீத் நல்லாருக்கு. இம்மிடியேட்டா பண்ணனும்னு தான் சொன்னார் என்கிறார் ஆதிக். ஓகே பண்ணினதுமே யார் நடிக்கிறா என்ன ஏதுங்கறதையும் பேசினோம். உடனே நைட் மைத்ரி மூவீ மேக்கர்ஸ்சும் ஓகே பண்ணினாங்க. ஷூட் போலாம்கற வரை வந்துடுச்சு. இவ்ளோ ஃபாஸ்ட்டா வரும்னு நமக்கே தெரியாது என்கிறார் வியப்புடன் ஆதிக்.

Next Story