குட் பேட் அக்லி: ஏகே இருக்கும்போது எதுக்கு ஏஐ…? வில்லனுக்காக அப்படி யோசித்த ஆதிக்!

by sankaran v |   ( Updated:2025-04-10 00:46:42  )
gbu ajith and athik
X

gbu ajith and athik

Good bad ugly: இன்று ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத் நடித்த குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக தியேட்டர்களில் திருவிழாக்கோலம்தான். இந்தப் படம் குறித்து இயக்குனர் ஆதிக் சொன்ன சில தகவல்கள்.

எல்லாருக்கு உள்ளேயும் மூணு ஷேடு இருக்கு. டைட்டிலுக்கு ரொம்ப நாளா யோசிச்சிக்கிட்டு இருந்தேன். நிறைய யோசிச்சேன். ஒண்ணும் செட்டாகல. இவன விட்டா ரொம்ப நாள் யோசிப்பான். சொல்ல மாட்டான் போலன்னு நினைச்சாரு அஜீத். நான் அவரிடம் 3 எபிசோடு இருக்கு. அதை வச்சித்தான் படத்துல முழுக்கதையே இருக்கு. அப்படியே யோசிச்சாரு. அப்புறம் குட் பேட் அக்லி எப்படி இருக்குன்னாரு.

எல்லாரும் ஆச்சரியப்பட்டாங்க. அது கதைக்கும் பொருந்துனது. நம்ம குட்டா இருந்தா உலகம் எப்படி இருக்குன்னு தெரியல. ஆனா உலகம் பேடா இருந்தா நாம அக்லியாகத்தான் மாறணும். மார்க் அண்டனில பஞ்சுமிட்டாய வச்சிப் பண்ணினோம். இதுல ஒத்த ரூபாயை வச்சி அர்ஜூன்தாஸ்சுக்குப் பண்ணினோம்.

gbu ajith, arjundasபடத்துல அர்ஜூன்தாஸ்சுக்கு மூடு மாறிக்கிட்டே இருக்கும். 80ஸ் வெர்சஸ் 2கே, 90ஸ் வெர்சஸ் 2கேன்னு தான் ஹீரோ அண்டு வில்லனுக்கு யோசிச்சோம். குட் என்ற டைட்டில் போடுற வரைக்கும் அஜீத் சார் சிரிச்சிக்கிட்டே இருப்பாரு. பைட் கூட சிரிச்சிக்கிட்டே போடுவாரு. பேட் என்ற டைட்டில் போட்டதும் சிரிக்கவே மாட்டாரு.

படத்துல பார்த்தா ஏதாவது ஒரு ஹைப் இருந்துக்கிட்டே இருக்கும். படத்துல ஏஐ யூஸ் பண்ணவே இல்லை. அஜீத்துக்கிட்ட ஸ்டண்ட் மாஸ்டர் ரிஸ்க்கா எதுவும் சொல்லிடக்கூடாதுன்னு ரொம்ப கேர்ஃபுல்லா இருந்தோம். அவரு எதைச் சொன்னாலும் செஞ்சிடுவாரு. இப்ப டெக்னிக் இருக்குறதால அந்த அளவு ரிஸ்க் வேணாம்னு இரு;தோம் என்கிறார் ஆதிக்

Next Story