நான் திருடனா?!.. என் மகனுக்கு என்ன பதில் சொல்றது?!. சிவக்குமாருக்கு அமீர் அனுப்பிய மேசேஜ்!..

by சிவா |
ameer
X

கடந்த சில நாட்களாகவே அமீரின் இயக்கத்தில் வெளிவந்த பருத்திவீரன் தொடர்பான பிரச்சனைதான் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அமீரை பற்றி ஞானவேல் ராஜா பேசியது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தி அமீருக்கு ஆதரவுகள் குவிந்து வருகிறது.

பருத்தி வீரன் படம் துவங்கி பாதி முடிந்த நிலையில் பட்ஜெட் அதிகமாக போனதாக சொல்லி இப்படத்தை தயாரிக்க முடியாது என சொல்லிட்டார் ஞானவேல் ராஜா. அமீரிடம் இதுபற்றி பேசிய கார்த்திக்கின் அண்ணன் சூர்யாவும் ‘படத்தை நீங்களே வச்சிக்குங்கண்ணே’ சொல்ல அமீரே பலரிடம் கடன் வாங்கி இப்படத்தை எடுத்து முடித்தார்.

இதையும் படிங்க: வருத்தம் தெரிவிச்சா விட்ருவனா?!… அடங்காத கோபத்தில் அமீர் அடுத்து செய்யப்போவது இதுதானாம்!…

ஆனால், படம் நன்றாக வந்ததால் அமீரிடம் பேச்சுவார்த்தை நடத்தி படத்தை ஞானவேல் ராஜா அவரின் பெயருக்கு மாற்றிக்கொண்டார். அதோடு, அப்படத்திற்கு அமீர் செலவு செய்த ரூ.1.65 கோடி பணத்தையும் இதுவரை அவர் திருப்பி தரவில்லை. கார்த்திக்கை ஹீரோவாக்க வேண்டும் என முடிவு செய்த பின் அவரை அமீரிடம் ஒப்படைத்தார் அவரின் அப்பாவும், நடிகருமான சிவக்குமார்.

பருத்திவீரனுக்காக பல இடங்களிலிலும் அமீர் கடன் வாங்கினார். இது உங்களுக்கு தேவையா? என அவரின் உடனிருந்தவர்கள் என கேட்டதற்கு ‘பெரியவர் என்னை நம்பி கார்த்திக்கை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார். அவருக்காக இதை செய்வேன்’ என சொன்னவர்தான் அமீர்.

இதையும் படிங்க: அமீர் அவ்வளவு சொல்லியும் கேட்காத சரவணன்!.. வீணா வாழ்க்கையை கெடுத்துக்கிட்டாரே!..

ஆனால், அமீர் பொய்க்கணக்கு எழுதி என்னிடம் காசு திருட பார்த்தார் என ஞானவேல் ராஜா கொடுத்த பேட்டி அமீரை காயப்படுத்திவிட்டது. இதைத்தொடர்ந்தே சசிக்குமார், சமுத்திரக்கனி, பாரதிராஜா, கரு பழனியப்பன், பொன் வண்ணன், இயக்குனர் சேரன் என பலரும் பொங்கியெழுந்து அமீருக்கு ஆதரவாகவும், ஞானவேல் ராஜாவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.

இதனால் அப்செட் ஆன சிவக்குமார் ஞானவேல் ராஜாவை மன்னிப்பு கேட்க சொல்ல அவரும் சம்பிரதாயத்திற்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். ஒருபக்கம் ‘என் மகன் என்னை பார்த்து நீ திருடனா? என கேட்கிறான். அவனுக்கு நான் என்ன பதில் சொல்வது?’ என சிவக்குமாருக்கு அமீர் ஒரு செய்தி அனுப்பினாராம். ஆனால், சிவக்குமாரிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: பருத்திவீரன் பட்ஜெட் என்ன?!.. அமீர் செலவு செய்தது எவ்வளவு?.. யார் தயாரிப்பாளர்?..

Next Story