Cinema News
“பேன் இந்தியால இந்த நல்ல படமெல்லாம் பார்க்கமுடியாது”… இவ்வளவு கோபத்தை அமீர் எங்க வச்சிருந்தாரோ??
சமீப காலமாக எங்குத் திரும்பினாலும் பேன் இந்தியா திரைப்படங்கள் அதிகமாக தென்படுகின்றன. இது சினிமா உலகில் வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும், மண் சார்ந்த திரைப்படங்களை பேன் இந்திய திரைப்படங்களாக உருவாக்குவதில் பல சிக்கல்கள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
உதாரணத்திற்கு, மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் தமிழர் வரலாற்றுச் சார்ந்த ஒரு புனைவு நாவலை அடிப்படையாக வைத்து எடுகப்பட்ட திரைப்படம் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். குறிப்பாக அப்போது சோழ நாடாக இருந்த தஞ்சை, நாகப்பட்டினம், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் கதை நிகழ்வது போல் பல சம்பவங்கள் அந்த நாவலில் உண்டு.
ஆதலால் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தை எப்படி பேன் இந்தியாவாக உருவாக்க முடியும் என பல கேள்விகள் எழுந்தன. எனினும் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக வெளிவந்தது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படம் உலகம் முழுவதிலும் நல்ல வசூலை பெற்றிருந்தாலும், ஆந்திரா, கர்நாடகா, வட இந்தியா போன்ற பகுதிகளில் உள்ள ரசிகர்களை அவ்வளவாக அத்திரைப்படம் கவரவில்லை என தகவல்கள் வெளிவந்தன. ஏனென்றால் தமிழர் நிலம் சார்ந்த கதையை, மற்ற மாநிலத்தாரரால் உள்வாங்கிக்கொள்ள முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் அமீர், பேன் இந்திய திரைப்படங்களை குறித்து தனது கருத்து ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.
“பேன் இந்தியா என்ற சொல் உருவாகாத காலகட்டத்திலேயே மணி ரத்னத்தின் பம்பாய், ரோஜா போன்ற திரைப்படங்கள் இந்தியா முழுவதும் ஓடியது. மதுரையில் யாதோன் கி பாரத் என்ற ஹிந்தி திரைப்படம் 100 நாட்கள் ஓடியது. அதே போல் ஷோலே, ஷான் போன்ற திரைப்படங்களும் மதுரையில் ஓடியது. அப்போதெல்லாம் பேன் இந்தியா என்று யாரும் கூறவேயில்லை.
இதையும் படிங்க: “என் பையன் ஒரு படம்தான் நடிப்பான்”… படத்தில் நடிக்க அனுமதி கொடுத்த பிரபல நடிகரின் தந்தை… ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்…
ஆனால் இப்போது பேன் இந்தியா என்று கூறும் வார்த்தையில் எனக்கு உடன்பாடு இல்லை. நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் பிடித்தமான ஒரே ஒரு உணவை தயார் செய்யமுடியுமா? என்றால் அது முடியாத காரியம்” என அமீர் அப்பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் “பேன் இந்தியா என்று பார்த்தால் நீங்கள் கிழக்குச் சீமையிலே, ஆட்டோகிராஃப் போன்ற படங்களை எடுக்கவே முடியாது. சேது, சுப்ரமணியபுரம் ஆகிய திரைப்படங்களை எடுக்கவே முடியாது. பருத்திவீரனை கூட நாம் எடுக்க முடியாது. அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ற திரைப்படங்களைத்தான் நாம் எடுக்க முடியும். அந்த படங்களை இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் ரசிக்கிறார்களா இல்லையா என்பதை அந்தந்த காலமூம் சூழலும்தான் முடிவு செய்யும்” எனவும் இயக்குனர் அமீர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.