அமீருக்கு ஓகே சொன்ன விஜய்… இருந்தும் டேக் ஆஃப் ஆகாததற்கு காரணம் என்ன தெரியுமா?…

Published on: November 26, 2023
kannapiran
---Advertisement---

Kannapiran movie: அமீர் தமிழ் சினிமாவில் மெளனம் பேசியதே திரைப்படத்தின் முலம் இயக்குனராய் அறிமுகமானார். இப்படத்தில் சூர்யா, லைலா, திரிஷா போன்ற நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படம் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

பின் இவர் பருத்திவீரன், ராம் போன்ற பல திரைப்படங்களை இயக்கினார். ஆனால் இப்படிபட்ட வெற்றித்திரைப்படங்களை இவர் கொடுத்திருந்தாலும் இவருக்கு அதற்கான சரியான அந்தஸ்து கிடைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

இதையும் வாசிங்க:சொந்த காசுல சூனியம் வச்சிகிட்டேன்… ஹீரோவான காரணத்தை உடைத்த அமீர்…

இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சேது, மாறன், வடசென்னை போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில்கூட மாயவலை திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைதளங்கள் அனைத்திலும் இவரே ஹாட் டாப்பிக்காக உள்ளார். பருத்திவீரன் படத்தில் இவர் அனுபவித்த சிக்கல்கள் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இவர் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு என எங்கு பார்த்தாலும் இவரின் செய்திகள்தான் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிங்க:வாய்ப்பு கொடுத்தவரையே வாரிவிட்ட சரவணன்!… சித்தப்பு இது ரொம்ப தப்பு….

இவர் பருத்திவீரனுக்கு அடுத்ததாக கண்ணபிரான் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். இப்படத்தில் நடிகர் விஜய்யை நடிக்க வைக்க எண்ணி விஜயிடமும் சென்று கதையை கூறினாராம். அதே சமயத்தில் இவர் ஆதிபகவான் திரைப்படத்தின் கதையையும் தயாராக வைத்திருந்தாராம். விஜய்யிடம் சென்று இவ்விரு கதைகளையும் விஜய்யிடம் சென்று கூறியுள்ளார்.

விஜய் இவ்விரு கதைகளில் எது தனக்கு சரியான கதையாக இருக்கும் என அமீரிடமே கேட்டாராம். அமீரும் கண்ணபிரான் கதையை கூறியுள்ளார். ஆனால் அப்படத்தில் விஜய் 6 வயது குழந்தைக்கு அப்பாவாக நடிக்க வேண்டும் என கூறியுள்ளார். முதலில் கதைக்கு ஓகே சொல்லாத விஜய் பின் சம்மதித்துவிட்டாராம். ஆனாலும் இப்படம் டேக் ஆஃப் ஆகவில்லை. ஏனெனில் இப்படத்திற்கான தயாரிப்பாளர் கிடைக்கவில்லையாம். மேலும் அமீரும் அதன்பின் விஜய்யிடம் அனுகவில்லையாம். நடிகர்களை ஃபாலோவ் செய்யும் பழக்கம் தனக்கு இல்லாததால் அப்படம் கை விட்டு போனது என அமீர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க:டப்பிங்கிற்கு வர மறுத்த பிரியாமணி… காண்டான அமீர்.. அதுக்காக இப்படியா சார் பண்ணுவீங்க!

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.