தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய் தனது கடைசி படமான் ஜனநாயகன் இன்னும் வெளியாவதில் சிக்கல் தீர்ந்தபாடில்லை.
விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், வெளியீட்டிற்குத் தயாராகியும் தொடர்ந்து பல்வேறு முட்டுக்கட்டைகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, திரைப்பட தணிக்கைக் குழுவிடம் சான்றிதழ் பெறுவதில் இன்னும் சிக்கல் நீடித்து வருவதால், படம் எப்போது திரைக்கு வரும் என்றே தெரியவில்லை
படத்திற்கு தொடர்ந்து நெருக்கடிக்ள் வந்துகொண்டிருந்தாலும் அது குறித்து பட்த்தின் நாயகன் விஜய் எந்தவிதமான க்ருத்தோ அல்லது விளக்கமோ அளிக்கவில்லை. வாக்கமான மௌனத்தையே இதிலும் கடைபிடிக்கிறார். இது அவரது ரசிகர்களைப் பெரும் ஏமாற்றத்திலும், சோர்விலும் ஆழ்த்தியுள்ளது. இப்படி உங்கள் படத்தின் பிரச்சனைக்கே வாய் திறக்காமல் அமைதியாகவே இருந்தால் எப்படி? என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் சென்சார் பிரச்சனை குறித்தும், விஜய்யின் மௌனம் குறித்தும் இயக்குனர் அமீர் தனது ஆதங்கத்தை கூறியுள்ளார். அதில் அவர் கூறியபோது,
அடிக்கிறவன் ஏன் அடிக்கிறேனு கடைசி வரைக்கும் சொல்லவே மாட்டான். ஆனால், இங்க அடி வாங்குறது நீதான். நீயாவது இதுக்குதான் என்னை அடிக்கிறாங்க, இதுதான் பிரச்சனைனு சொல்லணும்ல? அதையும் செய்யாம நீயும் இப்படி அமைதியாகவே இருந்தா, மத்தவங்களுக்கு உண்மை என்னனு எப்படித் தெரிய வரும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் ஜனநாயகன் தேர்தலுக்கு பின்புதான் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.





