Anumohan: அனுமோகன் 26 தமிழ் சினிமா இயக்குனர்களில் ஒருவர். இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் சிறந்த நடிகரும் கூட. படையப்பா படத்தில் இடம்பெற்ற பாம்பு புத்துக்குள்ள கை விட்டீங்களே… பாம்பு கடிக்கலீங்களா?.. எனும் வசனத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் அனுமோகன்.
இவர் இது ஒரு தொடர்கதை, நினைவுச் சின்னம் போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் மின்சார கண்ணா, பாட்டாளி, வில்லன் போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனது மிகச்சிறப்பான நடிப்பையும் வெளிக்காட்டியவர்.
இதையும் வாசிங்க:எம்ஜிஆரை கிண்டலடித்த சந்திரபாபு.. அந்த ஆணவத்துக்கு புரட்சி தலைவர் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?…
இவர் பங்காளி, தாய் மாமன் போன்ற திரைப்படங்களுக்கு கதையாசிரியராகவும் இருந்துள்ளார். இதற்கு இவரின் கையெழுத்துதான் முக்கிய காரணமாம். அந்த காலத்தில் கதையாசிரியர்களுக்கு கையெழுத்து நன்றாக இருந்தால் சினிமாவில் வாய்ப்பு கொடுப்பார்களாம். எனவே இவரும் கதையாசிரியராக நுழைந்துள்ளார்.
மேலும் இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையில் சில நாடகங்களில் நடித்துள்ளார். நந்தினி, ஜோதி, கனா காணும் காலங்கள் போன்ற பல நாடகங்களின் நடித்துள்ளார். இவருக்கு தனது சிறுவயதிலேயே சினிமாவில் இயக்குனராக வரவேண்டும் என விருப்பமாம்.
இதையும் வாசிங்க:கமல் மட்டும் அத செஞ்சிருந்தா ஊரையே விலைக்கு வாங்கியிருப்பார்!.. பார்த்திபன் சொல்றத கேளுங்க!..
பள்ளி காலத்தில் சினிமா ஷூட்டிங் பார்க்க அழைத்து சென்ற போது இயக்குனரை பார்த்து இவர் வந்தால் அனைவரும் அமைதியாக உள்ளனர். அதனால் நாமும் வளர்ந்து சினிமாவில் இயக்குனராக வேலை பார்க்க வேண்டும் என இயக்குனராக இருப்பதை ஒரு வேலை என நினைத்து ஆசைப்பட்டாராம். பின் பல திரைப்படங்களை பார்த்து அவருக்கே இயக்கம் பற்றிய ஆர்வம் வந்ததாகவும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
பின் தனது அம்மாவுடன் பல திரைப்படங்களுக்கு செல்வாராம். தனக்கு உடல்நிலை சரியில்லாதது போல் நடிப்பாராம். அதை பார்த்த இவரது தந்தை இவரது தாயிடம் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சொல்லுவாராம். ஆனால் மருத்துவமனைக்கு செல்லாமல் தியேட்டருக்கு சென்று படம் பார்த்துவிட்டு வருவாராம். இவ்வாறு தனது குழந்தைபருவத்தில் செய்த லூட்டியை பற்றி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் இயக்குனர் அனுமோகன்.
இதையும் வாசிங்க:சூர்யாவுக்கு விரிச்ச வலையில சிக்கிய அமீர்… பருத்திவீரனில் நடந்தது இதுதான்!…
தமிழ் சினிமாவில்…
மாநாடு படம்…
போடா போடி…
Viduthalai 2:…
விடுதலை 2…