கமல் மட்டும் அத செஞ்சிருந்தா ஊரையே விலைக்கு வாங்கியிருப்பார்!.. பார்த்திபன் சொல்றத கேளுங்க!..

பொதுவாக நடிப்பதை பல நடிகர்களும் தொழிலாக மட்டுமே நினைப்பார்கள். படப்பிடிப்பு முடிந்து விட்டால் அடுத்த நாள் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் வரை அவர்களுக்கு சினிமாவே நியாபகம் இருக்காது. 10 மணிக்கு அலுவலகம் சென்றுவிட்டு மாலை 6 மணிக்கு வீடு திரும்புவது போலத்தான் இங்கே பல நடிகர்களுக்கும் சினிமாவில் நடிப்பது.

ஆனால், சில நடிகர்கள் மட்டுமே சினிமாவை நேசித்து, சுவாசித்து வாழ்வார்கள். அதில் முக்கியமானவர் கலைஞானி கமல்ஹாசன். 5 வயது முதலே சினிமாவில் இருக்கும் கமல்ஹாசனுக்கு சினிமாதான் எல்லாம். அவர் பேசுவது, யோசிப்பது என எல்லாமே சினிமாதான். சமீபகாலமாகத்தன் பிக்பாஸ், அரசியல் என கொஞ்சம் வேறு விஷயங்களையும் செய்ய துவங்கினார்.

இதையும் படிங்க: சத்தியராஜை நம்பி நடுத்தெருவுக்கு வந்த பானுப்பிரியா!.. போட்ட கணக்கெல்லாம் தப்பா போச்சே!..

ஆனால், சினிமாவில் நடிப்பது மட்டுமே அவருக்கு முதல் முன்னுரிமை. ராஜகமல் பிலிம்ஸ் என்கிற நிறுவனத்தில் அவர் தயாரித்து நடித்த மும்பை எக்ஸ்பிரஸ், ஹேராம் உள்ளிட்ட சில படங்கள் அவருக்கு லாபத்தை கொடுக்கவில்லை. ஆனாலும், பட தயாரிப்பை அவர் நிறுத்தவில்லை. பொதுவாக நடிகர்கள் சினிமாவை மட்டுமே நம்பி இருக்க மாட்டார்கள்.

சினிமா மூலம் சம்பாதிக்கும் பணத்தை பல நடிகர்கள் ரியல் எஸ்டேட், திருமண மண்டபம், பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட பல தொழில்களில் முதலீடு செய்வார்கள். ஆனால், கமலுக்கு அப்படி எதுவுமே இல்லை. சினிமாவை தாண்டி ஒரு தொழிலை அவர் யோசிக்கவே இல்லை. இப்போது வரைக்கும் அப்படித்தான் இருக்கிறார். அதோடு, ரஜினி, விஜய், அஜித் போல பக்கா கமர்ஷியல் படங்களில் நடிக்க தெரிந்தும் அதையெல்லாம் செய்யாமல் வித்தியாசமான கதைக்களங்கள், பரிசோதனை முயற்சிகளை செய்து பார்க்கும் நடிகராகவே கமல் இருக்கிறார். இதனால் பலமுறை நஷ்டமும் அடைந்திருக்கிறார்.

விக்ரம் படம் ஹிட் அடித்து லாபம் வந்தவுடன் சிம்பு, சிவகார்த்திகியேன் என இளம் நடிகர்களை வைத்து படங்களை தயாரிக்க துவங்கிவிட்டார். ஒருமுறை ஒரு சினிமா விழாவில் பேசியபோது ‘சகலகலா வல்லவன் படம் அவ்வளவு வசூலை அள்ளியது. அந்த ரூட்டை பிடித்து கமர்ஷியல் மசாலா ஹீரோவாக மட்டுமே நடிப்பது என அவர் முடிவெடுத்திருந்தால் அவர் ஊரையே விலைக்கு வாங்கி இருப்பார். ஆனால், அவர் அதை செய்யவில்லை. புதுப்புது பரிசோதனை முயற்சிகளை செய்து ரசிகர்களின் ரசனையை மாற்றவே முயற்சி செய்தார்’ என பேசியிருந்தார்.

இதையும் படிங்க: பாலச்சந்தருடன் முதல் சந்திப்பு!.. ரஜினி கேட்ட கேள்வி!.. நடிக்க வாய்ப்பு கிடைச்சது இப்படித்தான்!..

 

Related Articles

Next Story