நான் சொல்றத மட்டும் செய்யுங்க!.. நடிகர் திலகத்தையே அதட்டி நடிக்க வைத்த இயக்குனர்!..
Sivaji ganesan: நடிகர் சிவாஜி எப்படிப்பட்ட நடிகர் என்பதை சொல்ல தேவையில்லை. ஒரு பிறவி நடிகராகவே அவர் இருந்தார். சின்ன வயதிலேயே நாடகங்களில் நடிக்க போனதால் நடிப்பு என்பது அவரின் உடம்பிலேயே ஊறிப்போனது. பல கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் இவர்.
ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என சொல்லுமளவுக்கு பல வேடங்களிலும் நடித்து, அந்த கதாபாத்திரங்களாகவே மாறி நடிகர் திலகமாகவும் மாறினார். சரித்திர புருஷர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், இலக்கியங்களில் வந்த கதாபாத்திரங்கள், கடவுள் அவதாரங்கள் என இவர் போடாத வேஷமே இல்லை.
இதையும் படிங்க: சிவாஜியை பல மணி நேரம் காக்க வைத்த சரோஜா தேவி!. டிராப் ஆன திரைப்படம்!..
ஒரு காட்சியில் இயக்குனர் என்ன எதிர்பார்க்கிறாரோ அதைவிட பல மடங்கு கொடுப்பார் சிவாஜி. அதேநேரம், அவர் நடிப்பில் சில கரெக்ஷன்களை இயக்குனர் சொன்னால் அதையும் ஏற்றுக்கொண்டு அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ அப்படியும் நடித்து கொடுப்பார். அதுதான் சிவாஜி.
அவர் எந்த அளவுக்கு இயக்குனருக்கு மரியாதை கொடுப்பார் என்பதற்கு ஒரு சம்பவத்தை இங்கே பார்க்கலாம். இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் சிவாஜி. எஸ்.எஸ்.ஆர், சாவித்ரி உள்ளிட்ட பலரும் நடித்து 1964ம் வருடம் வெளியான திரைப்படம் கை கொடுக்கும் தெய்வம். இந்த படத்தில் எஸ்.எஸ்.ஆர் எழுதிய ஒரு கடிதத்தை சிவாஜி படிப்பது போல் ஒரு காட்சி வரும்.
இதையும் படிங்க: டாக்டர் சொல்லியும் கேட்காம நடிச்சி ரத்த வாந்தி எடுத்த சிவாஜி!.. டெடிக்கேஷன்னா நடிகர் திலகம்தான்!..
‘நீங்கள் கடிதத்தை பார்த்து ரியாக்ஷன் மட்டும் கொடுங்கள். எஸ்.எஸ்.ஆரின் குரலை உங்கள் முகத்தில் ஓவர் லாப் செய்துவிடுகிறேன்’ என கோபாலகிருஷ்ணன் சொல்ல சிவாஜியோ ‘அப்படி வேண்டாம். அந்த கடிதத்தை நானே படித்து விடுகிறேன்’ என சொல்லி இருக்கிறார். அதற்கு கோபால கிருஷ்ணன் ‘இது என் படம். நான்தான் டைரக்டர். நான் சொல்றத மட்டும் கேட்டு நடிங்க’ என சொல்லிவிட்டு போய்விட்டார்.
அவர் அப்படி சொன்னதற்காக சிவாஜி கொஞ்சம் கூட கோபப்படவில்லை. அவர் சொன்னபடியே நடித்துவிட்டு சிரித்துக்கொண்டே போய்விட்டார். அதற்கு காரணம் கோபாலகிருஷ்ணனுடன் அவருக்கு இருந்த நட்புதான். அவர் மட்டுமல்ல பல நடிகர்களும் கோபாலகிருஷ்ணனுடன் நல்ல நட்பில் இருந்துள்ளனர். அவரும் எல்லோருடனும் அன்பாக பழகியிருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிவாஜி படத்தால் கடுப்பான படக்குழு!… அதையே படத்தலைப்பாக்கிய தயாரிப்பு நிறுவனம்!..