தம்பிக்காக காத்திருக்கும் தளபதி!.. ஆனா அட்லியோட பிளானே வேற!.. இப்படி ஆகிப்போச்சே!..
Director atlee: இயக்குனர் ஷங்கர் விஜயை வைத்து நண்பன் படத்தை இயக்கிய போது உதவி இயக்குனராக வேலை செய்தவர் அட்லீ. படப்பிடிப்பு தளத்தில் அட்லீ வேலை செய்யும் விதத்தை பார்த்த விஜய் அவரை அழைத்து ‘நல்ல கதை இருந்தால் சொல்லுங்க. உங்க இயக்கத்தில் நடிக்கிறேன்’ என சொன்னார்.
அதன்பின் அட்லி இயக்குனராக மாறி 'ராஜா ராணி' படம் எடுத்தார். இதில் ஆர்யாவும், நயன்தாராவும் நடித்திருந்தனர். இந்த படம் விஜய்க்கு பிடித்துபோக அட்லியை அழைத்து பாராட்டியதோடு தனக்கும் ஒரு கதையை உருவாக்க சொன்னார். அப்படி உருவான திரைப்படம்தான் தெறி.
இதையும் படிங்க: முன்னாடியே உஷார் ஆன மிஸ்கின்.. தெரியாம மாட்டிக்கிட்ட விஜய் சேதுபதி.. என்ன நடக்கப் போதோ..?
முதன் முதலாக விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்த இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. படமும் நல்ல வசூலை பெற்றது. அதோடு, விஜயை திரையில் எப்படி காட்ட வேண்டும்.. விஜய்க்கு எப்படிப்பட்ட மாஸ் காட்சிகளை வைக்க வேண்டும்.. அவரின் ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என எல்லாவற்றையும் புரிந்து வைத்திருக்கும் அட்லி அதை திரையில் கொண்டு வந்தார்.
அதனால்தான் மீண்டும் அட்லியின் இயக்கத்தில் மெர்சல், பிகில் ஆகிய திரைப்படங்களில் விஜய் நடித்தார். அதோடு, எந்த மேடையில் பேசினாலும் ‘விஜய் அண்ணன்.. விஜய் அண்ணன்’ என உருகிறார் அட்லீ. பிகில் படத்திற்கு பின் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுவிட்டது.
இதையும் படிங்க: மருத்துவமனையில் விஜயகாந்த்!.. முந்திக் கொண்ட சூர்யா.. இன்னும் விஜய்க்கு மனசு வரலையேப்பா?..
எனவே, பாலிவுட்டில் அவருக்கு வாய்ப்புகள் வர துவங்கிவிட்டது. தற்போது ஹாலிவுட் கதாசிரியர் ஒருவருடன் இணைந்து ஒரு புதிய கதையை அட்லி எழுதி வருகிறார். இந்த படத்தில் விஜய் நடிப்பார்.. ஷாருக்கானும், கமல்ஹாசனும் இணைந்து நடிப்பார்கள். என பல தகவல்கள் வெளியானது.
விஜயும் அட்லிக்காக காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், அட்லியே விஜய், ஷாருக்கான் கிடைத்தால் அவர்களை வைத்து இயக்குவேன். இல்லையேல் வேறு ஹீரோ பக்கம் போவேன் என சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். இப்போது மும்பைக்கு சென்று கதையை எழுத துவங்கிவிட்டாராம். யார் ஹீரோ என்பது பற்றியெல்லாம் யோசிக்காமல் கதையை எழுது முடித்தபின்னரே ஹீரோக்களை அணுக அவர் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
இதையும் படிங்க: திடீரென அழைத்த விஜய்… திக்குமுக்காடி போன அட்லீ!.. அவரே அத எதிர்பார்க்கலயாம்!..