More
Read more!
Categories: Cinema News latest news

அட்லிக்கு அதிகரித்த டிமாண்ட்!. பட் அவர் பிளானே வேற!.. அதுவும் நியாயம்தான்!..

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி வரும் ஷங்கரின் உதவியாளர்தான் அட்லீ. இவரும் குருநாதரை போலவே அதிக பட்ஜெட்டில் படங்களை இயக்கி தயாரிப்பாளர்களின் வயிற்றில் புளியை கரைப்பார். மேலும், இவர் மீது ஏற்கனவே தமிழில் ஹிட் அடித்த படங்களின் கதைகளை கொஞ்சம் மாற்றி, பட்டி டிங்கரிங் செய்து திரைப்படங்களை எடுத்து வருகிறார் என்கிற குற்றச்சாட்டும் உண்டு.

ஆனால் அதைபற்றியெல்லாம் அட்லீ கவலைப்படுவதில்லை. ராஜாராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர் அடுத்து விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி பெரிய இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்தார். அதன்பின் ஷாருக்கானிடமிருந்து இவருக்கு அழைப்பு வந்தது.

Advertising
Advertising

இதையும் படிங்க: அட்லீக்கு கொக்கி போட்ட டாப் பாலிவுட் நடிகர்… அப்போ அண்ணா பாசமெல்லாம் பொய்யா கோபால்!

அப்படி உருவான திரைப்படம்தான் ஜவான். கடந்த 3 வருடங்களாக எடுக்கப்பட்ட இந்த படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது. வட மாநிலங்களிலும், வெளிநாட்டிலும் ஷாருக்கானின் ரசிகர்கள் போட்டி போட்டுகொண்டு இப்படத்தை பலமுறை பார்த்து வருகிறார்கள்.

இதனால் வசூல் எக்கு தப்பாக எகிறி வருகிறது. கடந்த 7ம் தேதி வெளியான இந்த திரைப்படம் கடந்த 5 நாளிலேயே ரூ.500 கோடியை தாண்டிவிட்டதாக சொல்லப்படுகிறது. இப்படியே போனால் இப்படம் இன்னும் ஒரு வாரத்தில் ரூ.1000 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நீங்க மட்டும் பாலிவுட் போலாம்… அவரு போக கூடாதா? ஜவானில் அட்லீ செய்த தில்லாலங்கடி!

எனவே, அட்லிக்கு பாலிவுட்டிலும் டிமாண்ட் அதிகரித்து வருகிறது. சல்மான்கான், அமீர்கான் போன்ற கான் நடிகர்கள் கூட இவரின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகின்றனர். அதற்கான பேச்சுவார்த்தைகளும் இப்போதும் நடந்து வருகிறது. ஒருபக்கம், ஏற்கனவே சன்பிக்சர்ஸ் நிறுவனத்திடம் அட்லி அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார். ஆனால், யாரை ஹீரோவாக வைத்து படம் இயக்குவார் என தெரியவில்லை.

பாலிவுட், டோலிவுட் என பல பக்கமிருந்தும் ஆஃபர்கள் வந்தாலும் சில மாதங்கள் குடும்பத்துடன் வெளிநாட்டில் சுற்றுலா செய்து ஓய்வெடுத்துவிட்டு அதன்பின் அடுத்த படம் பற்றி யோசிக்கலாம் என்கிற முடிவில் அட்லி இருக்கிறாராம்.

இதையும் படிங்க: அது என் கூடவே பிறந்தது! ‘ராஜாராணி’ முதல் ‘ஜவான்’ வரை கொஞ்சமும் மாறாத அட்லீ – இதுல கோட்ட விட்டீங்களே

Published by
சிவா

Recent Posts